Watch Avaniyapuram Jallikattu LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை: இடைவெளி இல்லாமல் HD தரத்தில் ABP நாடு Live-இல் பார்க்கலாம்....
Avaniyapuram Jallikattu 2022 LIVE: அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். தித்திக்கும் பொங்கலோடு தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு அவனியாபுரத்தில் தொடங்குகிறது. ஏபிபி நாடு அதை நேரலை செய்கிறது
தை பிறந்தாள் வழி பிறக்கும்.... வழி மட்டுமல்ல... விழி முழுக்க விருந்து படைக்கும் நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு(jallikattu) , மதுரை மண்ணில் இன்று காலை தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவாக நடைபெறும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டு ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி நிபந்தனைகளுடன் நடைபெற உள்ளது.
தை முதல் நாளான இன்று, தமிழர் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்ற விழாவாக மதுரை மாவட்ட அவனியாபுரத்தில் வழக்கமாக இன்று தொடங்கும். ஜனவரி 14 அவனியாபுரம், ஜனவரி 15 பாலமேடு, ஜனவரி 16 அலங்காநல்லூர் என வரிசையாக மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்து வந்த விழா; கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக, ஜனவரி 16ம் தேதி ஞாயிற்று கிழமைக்கு பதிலாக, ஜனவரி 17 ம் தேதி மாற்றப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, குறிப்பிட்ட அளவு காளைகளுக்கும், மாடு பிடிவீரர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத முறையாக, இந்த ஆண்டு, ஆன்லைன் முறையில் காளைகள் பதிவு நடைபெற்றது. ஆன்லைனில் குறிப்பிட்ட படி மட்டுமே காளைகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இன்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை வீட்டில் இருந்த படி பாதுகாப்பாக நீங்கள் பார்த்து மகிழ, ஏபிபி நாடு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஆம்... அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நொடி தவறாமல் அப்படியே நேரலை செய்கிறது ஏபிபி நாடு.
ஏபிபி நாடு இணையதளம், ஏபிபி நாடு யூடியூப் பக்கம், ஏபிபி நாடு பேஸ்புக் உள்ளிட்ட ஏபிபி நாடு செய்திகள் வலம் வரும் அனைத்து தளங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பாகும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
எனவே, நேயர்கள் அனைவரும் எந்த விளம்பர தொந்தரவும், குறுக்கீடும் இல்லாமல், உள்ளது உள்ளபடி, உயர்ரக தொழில்நுட்பத்தில், ஆக்ஷன் ரிப்ளே உடன், மண்மணம் மாறாத கமெண்ட்ரி உடன் கேட்டு , பார்த்து மகிழுங்கள். இந்த பொங்கல் உங்களுக்கு பாதுகாப்பான பொங்கலாக அமைய, ஏபிபி நாடு எடுத்துள்ள இந்த முயற்சியை, நீங்கள் எங்களின் மொபைல் போன் மூலமாக அப்ளிகோஷனிலும், பேஸ்புக் மூலமாக மொபைல் மற்றும் கணினி, டேப்லெட் வழியாகவும், தொலைக்காட்சியில் யூடியூப் அப்ளிகேஷன் வழியாகவும் ஜல்லிக்கட்டு நேரலையை கண்டு ரசிக்கலாம். இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கும் நேரலை, ஜல்லிக்கட்டு நிறைவடையும் வரை தொடர்ந்து நடக்கும். அவனியாபுரம் மட்டுமல்லாமல், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் நீங்கள் நேரலையில் எந்த தொந்தரவும் இல்லாமல் முழு எச்.டி., தரத்தில் கண்டு ரசிக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்