Arabic Kuthu: இதான் சொன்னாரு.. சிவகார்த்திகேயனின் அரபிக்குத்து லிரிக்ஸை படிச்சிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
அரபிக்குத்து பாட்டு பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்து வருகிறது
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறன. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முன்னதாக தொடங்கிய நிலையில் அண்மையில் படத்திலிருந்து, ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோவாக, அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
அரபிக்குத்து பாட்டு பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்து வருகிறது. யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இந்தப்பாடலுக்கு பலரும் நடனமாடி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக பாட்டுக்காக ரிலீஸ் செய்யப்பட்ட ப்ரோமாவும் இணையத்தில் ஹிட் அடித்தது. அனிருத்தும், நெல்சனும், சிவகார்த்திகேயனும் அடித்த லூட்டி நகைச்சுவையாக ரீச் ஆனது. குறிப்பாக கடைசியில் வந்த விஜயின் வாய்ஸ் ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக அமைந்தது. இந்நிலையில் அரபிக்குத்து பாடல் குறித்து அப்பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
View this post on Instagram
யூடியூப் சேனல் ஒன்றின் விருது வழங்கும் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார் என விளக்கியுள்ளார். அதில் அரபிக்குத்து பாடல் ஏற்கெனவே எழுதப்பட்டு ஷூட் செய்யப்பட்டது. அதன்பின்னர் தான் அந்த பாடலுக்கான ப்ரோமா ரிலீஸ் செய்தோம். அப்போது பேசிய விஜய், ''சூப்பர்பா.. அரபிக்கெல்லாம் எழுதுறியே.. ரொம்ப நன்றி என்றார். நான் அனிருத் பாதி பாடிருவார். கேப்பை பில் பன்னா போதுமே என்று சொன்னேன். பாடலை முதல்தடவை கேட்டபோதே பிடித்துவிட்டது என்றார் விஜய். அதுவே பெரிய விருது'' என அனிருத்திடம் சொன்னேன். என்றார்.