(Source: ECI/ABP News/ABP Majha)
SivaKarthikeyan 21: சிவகார்த்திகேயனுடன் கைக்கோர்த்த கமல்ஹாசன்... வெளியானது படத்தின் முக்கிய அறிவிப்பு..!
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்தாண்டு தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் வெளியாகி பெரும் தோல்வியை தழுவியது. இதனால் தனது அடுத்தடுத்து படங்களான மாவீரன், அயலான் போன்ற படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் கவனமுடன் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்தியேனின் 21வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சோனி நிறுவனத்துடன் இணைந்து இப்படம் தயாராகிறது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Welcome onboard @gvprakash for mission #SK21 ! #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21JoiningForces #RKFIProductionNo_51
— Raaj Kamal Films International (@RKFI) May 3, 2023
@ikamalhaasan @Siva_Karthikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh pic.twitter.com/0wcpOXhFOQ
ஏற்கனவே கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை தயாரிப்பது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.