Watch Video: “போய் படிங்க பா, ப்ளீஸ்” - மாணவர்களின் செயலால் இன்ஸ்டா பக்கத்தில் கெஞ்சிய நடிகர் சித்தார்த்!
Siddharth: சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு படிக்கும் வேலையை பார்க்கும்படி நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சித்தார்த், நடிப்பதைத் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், பாடகர் மற்றும் உதவி இயக்குநராகவும் இருந்துள்ளார். பாய்ஸ் படத்தின் கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த் தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான 'சித்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சனரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. தற்போது இந்தியன் 2 மற்றும் ஷைத்தான் கா பச்சா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளன.
சித்தார்த் தன்னுடைய கருத்துக்களை மிகவும் துணிச்சலாக முன்வைக்கக்கூடியவர். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கி தலைப்புச் செய்திகளிலும் பெற்றுள்ளார். நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் பல காலமாக டேட்டிங் செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் தங்களுக்குள் இருக்கும் உறவு பற்றி வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் பல இடங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த் லேட்டஸ்ட்டாக வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். "எனக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரெக்வஸ்ட் வந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய போஸ்டுக்கு சித்தார்த் கமெண்ட் செய்தால் நான் உடனே படிக்கச் போய் விடுவேன், பரீட்சை எழுத சென்று விடுவேன், என்னுடைய எதிர்காலத்தை பார்த்துக்கொள்வேன், என்னுடைய நாட்டை போய் காப்பாத்துவேன் இப்படி பல விதமாக பதிவுகள் அனுப்புகிறார்கள்.
இவை அனைத்திற்கும் முதலில் நீங்கள் சோசியல் மீடியாவில் இருந்து வெளியில் சென்று உங்கள் போனை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும். பிறகு போய் படித்து விட்டு பரீட்சையை எழுத வேண்டும். இது ஒரு அபத்தமான ட்ரெண்ட். நான் உங்களுடைய போஸ்டுக்கு கமெண்ட் செய்ய மாட்டேன். போய் படிங்க பா... ப்ளீஸ் பா படிங்க பா" என்று நடிகர் சித்தார்த் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதற்கு கேப்ஷனாக "இந்த ரீல் வீடியோவை நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இன்னும் சோசியல் மீடியாவில் தான் இருக்குறீர்கள். உபயோகமாக எதுவும் செய்யவில்லை என அர்த்தம்” எனவும் போஸ்ட் செய்துள்ளார்.
View this post on Instagram
பள்ளிகளில் எக்ஸாம் தொடங்கி விட்டதால் மாணவர்கள் சோசியல் மீடியாவில் நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதற்காக இந்த வீடியோ மூலம் அலர்ட் செய்துள்ளார் சித்தார்த்.