Watch Video: எனிமி பட பாடலுக்கு க்யூட்டான டான்ஸ்.... சித்தார்த் - அதிதி ஜோடிக்கு இதயங்களைப் பறக்கவிடும் ரசிகர்கள்!
'எனிமி’ படத்தின் இந்தப் பாடல் இன்ஸ்டா ட்ரெண்டிங்கில் மீண்டும் வலம் வரும் நிலையில், இந்த ஜோடி க்யூட்டாக நடனமாடி வீடியோ பகிர்ந்து தங்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர்.
தெலுங்கில் மகா சமுத்திரம் படத்தில் நடித்தது தொடங்கி நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் திளைத்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவர்கள் இருவருமே தங்கள் உறவைப் பற்றி மீடியாக்களிடம் ஒரு வார்த்தை கூட கூறாத நிலையில், முன்னதாக பொன்னியின் செல்வன் பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஒன்றாக வருகை தந்து கவனமீர்த்தனர்.
தொடர்ந்து இருவரும் பொது நிகழ்வுகளுக்கு வருகை தருவது, இணையத்தில் மாறி மாறி போஸ்ட் செய்வது என கிசுகிசுக்கப்படத் தொடங்கினர்.
முன்னதாக அதிதியின் பிறந்த நாளுக்கு என் இதயத்தின் இளவரசி எனக் குறிப்பிட்டு சித்தார்த் க்யூட்டான வாழ்த்துப் பதிவைப் பகிர்ந்திருந்தார்.
அதேபோல் அதிதியும் தொடர்ந்து சித்தார்த்தைக் குறிப்பிட்டு தொடர்ந்து பதிவிட்டு வந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த ஜோடிக்கு இதயங்களைப் பறக்கவிட்டனர் ரசிகர்கள்.
இந்நிலையில், சித்தார்த் - அதிதி ஜோடி ‘எனிமி’ படத்தில் இடம்பெற்ற ’மால டம் டம்’ பாடலுக்கு நடனமாடி பகிர்ந்துள்ள ரீல்ஸ் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
’எனிமி’ படத்தின் இந்தப் பாடல் இன்ஸ்டா ட்ரெண்டிங்கில் மீண்டும் வலம் வரும் நிலையில், இந்த ஜோடி க்யூட்டாக நடனமாடி வீடியோ பகிர்ந்து தங்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர்.
View this post on Instagram
இந்நிலையில், நடிகை ஹன்சிகா, கொங்கனா உள்பட பல பிரபலங்களும், ரசிகர்களும் இந்தப் பதிவில் கமெண்ட்ஸ் பகிர்ந்து இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.