'எனது பெயரில் மோசடி; எச்சரிக்கையாக இருங்கள்’ - போட்டோ வெளியிட்ட பிரபல நடிகர்..!
சினிமா, அரசியல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி போலியான சமூகவலைதள கணக்குகள், செல்போன் எண்கள் மூலம் பலரும் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
தனது பெயரை பயன்படுத்தி மோசடி நடப்பதாக கூறிய நடிகர் சாந்தனு, அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இயக்குநரும், நடிகருமான பாக்யராஜீன் மகனும், நடிகருமான சாந்தனு, பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். இந்த நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது பெயர் மற்றும் தனது குடும்பத்தாரின் பெயரை பயன்படுத்தி மோசடி நடப்பதாக என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சாந்தனுவின் டுவிட்டர் பக்கத்தில், தனது திரையுலக நண்பர்களுக்கு தன் குடும்பத்தாரின் பெயரில் இருந்து பல தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், தனது பெயரையும், குடும்பத்தாரின் பெயரையும் பயன்படுத்தி மோசடியில் ஈடுபவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், தயவு செய்து இதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், இதுதொடர்பாக அறிய தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறிய அவர், போலி எண்ணில் வந்த நம்பரையும் வெளியிட்டுள்ளார்.
Hello
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) January 25, 2022
My film friends have recently been receiving anonymous calls portraying to be part of my family & trying to misuse our name…
Kindly beware & do not encourage! Pls feel free to reach out for any clarification.. Tnx
Ps: Attaching a screenshot of one of the numbers they used pic.twitter.com/T8oARfN3ll
சினிமா, அரசியல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி போலியான சமூகவலைதள கணக்குகள், செல்போன் எண்கள் மூலம் பலரும் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. ஆனால், எது போலி என்று கூட அறியாமல், சிலர் மோசடிகார்களின் வலையில் சிக்கிவிடுகின்றனர். எது போலி, நிஜம் என்று தெரியாத வகையில் மோசடியில் ஈடுபடுகின்றனர். பிரபலங்கள் இதுதொடர்பாக எச்சரித்து வந்தாலும், இந்த மாதிரி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பிரலங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி நடைபெறாமல் இருக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இதற்கான தீர்வாக அமையும் என்றும் பலர் கூறுகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்