Evening News Headlines Today: டாஸ்மாக்கை மூடுங்கள்... சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி...இந்தியாவின் வெற்றி இலக்கு என்ன?..இன்றைய டாப் நியூஸ்..!
Evening News Headlines Today, Jan 19: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரிநாடாரை போலீசார் கைது செய்தனர்.
* 'எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுக' - குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
* தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு
* ரூ.120 கோடி கடன்..! பிரைம் சரவணா ஸ்டோரை ஜப்தி செய்தது இந்தியன் வங்கி!!
* தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பெரும்பாலான கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை.
* கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - இபிஎஸ்
இந்தியா:
* உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
* பாஜகவில் இணைந்தார், முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ்
* கோவா சட்டசபை தேர்தல் : ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
* சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு
உலகம்:
* பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் வலுவடைந்து வருவதாக ஐநா சபையில் இந்தியா குற்றாச்சாட்டு.
* கடன் பாக்கிக்காக லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் பங்களாவை கைப்பற்ற இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு
விளையாட்டு:
* 2021ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பாபர் ஆசம் தேர்வு. இந்திய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.
* 2022ஆம் ஆண்டு இறுதியில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.
* தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்கு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்