Bigg Boss Ultimate: ''ஓட்டுனது போதும்.. இனி எல்லாரையும் ஓட விட்றேன்'' - மீண்டும் பிக்பாஸ் களத்தில் ஜூலி
Julie in Bigg Boss Ultimate Tamil: ‘ஜூலி மேடம் ஒரு குறும்படம் கதை இருக்கு நடிக்கிறீங்களா?. ஜூலி, ‘அது என்னையா குறும்படம், உன் வாயில் ஷார்ட்ஃபிலிம் எல்லாம் வராதா..?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியாளராக ஜூலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள சில போட்டியாளர்கள் தொடர்பான தகவல் வெளியாகியனது. அதன்படி இந்தப் போட்டியில் வனிதா விஜய்குமார், அனிதா சம்பத், கவிஞர் சினேகன், பாலாஜி முருகதாஸ், ஷெரின், ஷாரிக், நகைச்சுவை நடிகர் பரணி, நடிகை ஓவியா, ஜூலி, நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி உள்ளிட்ட சிலர் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரியவந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக ஜூலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஹாட்ஸ்டாரின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஜூலி செல்போனில் ஹலோ சொல்கிறார். எதிர்முனையில் ஒருவர், ‘ஜூலி மேடம் ஒரு குறும்படம் கதை இருக்கு நடிக்கிறீங்களா? எனக் கேட்கிறார். அதற்கு ஜூலி, ‘அது என்னையா குறும்படம், உன் வாயில் ஷார்ட்ஃபிலிம் எல்லாம் வராதா..? எனக் கேட்கிறார். பின்னர், அவார்ட் நிகழ்ச்சிக்கு போகனும் என ஜூலி டிரைவரிடம் பேச, அதற்கு அவர், வயிற்று வலி வரலை என்று சொல்ல, சைடில் சின்ன வீடியோவில் முதல் சீசனில் ஜூலி வயிற்று வலி எனக்கூறுவது வருகிறது. தொடர்ந்து பல சுவாரஸ்யங்களை காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
#BBUltimate-ல் ஜுலி !! #YaaruAnthaHousemate pic.twitter.com/eLuXKUYeN2
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 25, 2022
முன்னதாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன் அறிமுகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து யார்..யாரெல்லாம் வருவார்கள் என்ற் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 24 மணிநேரமும் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை கண்டுகளிக்கலாம் என்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இனி வரும் நாட்களில் அடுத்த போட்டியாளர்கள் யார் யார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்