மேலும் அறிய
Advertisement
Robo Shankar: ரஜினி, கமலை சந்தித்த ரோபோ ஷங்கர்.. இணையத்தில் வைரலான புகைப்படம்.. காரணம் என்ன?
Robo Shankar: ஒரே நேரத்தில் ரஜினி, கமலை மனைவியுடன் சென்று சந்தித்த ரோபோ ஷங்கர்
Robo Shankar: நடிகர் ரோபோ ஷங்கர் தனது திருமண நாளை ஒட்டி ரஜினி மற்றும் கமல்ஹாசனிடம் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆரம்ப காலத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அவரது தனித்திறன் ரோபோ ஷங்கரை நடிகனாக மாற்றியது. சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததும், விஜய் சேதுபதி நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் பசுபதியுடன் நடித்து அசத்தினார். அதன்பிறகு ரோபோ ஷங்கருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தனுஷ் நடித்த மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், ஹீரோ, அஜித்துடன் விஸ்வாசம், விஜயுடன் புலி, விக்ரமுடன் கோப்ரா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக ரோபோ ஷங்கர் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். அதீத மது பழக்கம் அவருக்கு கேடாய் அமைந்தது என்றும், மஞ்சள் காமாலை நோயால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. ரோபோ ஷங்கரின் உடல் மெலிந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த சூழலில் தான் நலமுடன் இருப்பதாக ரோபோ ஷங்கரும், அவரது மனைவியும் விளக்கம் அளித்தனர். இதற்கிடையே ரோபோஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கமல்ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்த புகைப்படமும் வெளியானது. மேலும் நடிகர் தனுஷ் தான் குடிப்பதை கைவிட்டு தன்னையும் குடிப்பதை நிறுத்தச் சொல்லி ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவை ரோபோ ஷங்கர் சிறப்பாக தலைமையேற்று நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று 22 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ரோபோ ஷங்கர் தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இருவரிடமும் ரோபோ ஷங்கர் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Rajinikanth https://t.co/t5StSVAzCY
— Sena (@senakochadaiyan) November 29, 2023
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion