Entertainment Headlines: அமீரிடம் வருத்தம் தெரிவித்த ஞானவேல்.. கத்ரீனாவிடம் சரண்டரான விக்கி கௌஷல்.. இன்றைய சினிமா ரவுண்டப்!
Entertainment Headlines November 29: இன்றைய நாளில் சினிமாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
Banuchander on Rajinikanth : சாப்பிட கூட காசு இருக்காது... யாரையுமே அவர் மறக்கவில்லை... ரஜினி குறித்து பேசிய பானுசந்தர்
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என 80களில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் பானுசந்தர். ஏராளமான ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடைய மகனை ஒரு ஸ்டாராக்கி பார்க்க வேண்டும் என்ற தனது தாயின் விருப்பத்தால் நடிக்க வந்தவர். நடிகர் பானுசந்தர் ஆக்ட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்பு பயின்று வந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயின்ற அதே இன்ஸ்டிட்யூட்டில் தான் பானுசந்தரும் ஆக்டிங் பயின்றுள்ளார். ரஜினிகாந்த் பற்றின சில ஸ்வாரஸ்யமான தகவல்களை சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் படிக்க
Vicky Kaushal: கத்ரீனாவின் “டவல் ஃபைட்” .. மிரண்டு போன விக்கி கௌஷல்.. என்ன சொன்னார் தெரியுமா?
பாலிவுட் பிரபல பிரபலங்கள் கத்ரீனா கைஃப் மற்றும் சல்மான் இணைந்து நடித்த 'டைகர் 3' திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியானது. இப்படத்தில் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடித்திருந்தார். மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் கத்ரீனாவின் ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். அதிலும் குறிப்பாக மற்றுமொரு பெண்ணுடன் கத்ரீனா டவலுடன் சண்டையிடும் காட்சி வெளியான நாள் முதல் எக்கச்சக்கமான பாராட்டை பெற்று கொடுத்தது. மேலும் படிக்க
Paruthiveeran: அவமானப்படுத்திவிட்டு வருந்துவது என்னமாதிரியான வருத்தம்? ஞானவேல் ராஜாவுக்கு கேள்வி எழுப்பிய சசிகுமார்!
இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்று காலை மன்னிப்பு கேட்டது தொடர்பாக ’போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது’ என இயக்குநர் சசிகுமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ’பருத்தி வீரன்’ படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை கடந்த சில நாட்களாக பூதகரமாக வெடித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை திருடன் எனவும், வேலை தெரியாதவர், என் காசில் தொழிலை கற்றுக்கொண்டார் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
War 2 Release: ஹ்ரித்திக் ரோஷனுடன் கைகோர்த்த ஜூனியர் என்.டி.ஆர்.. ‘வார் 2’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?
இந்தியில் உருவாகி வரும் ஹ்ரித்திக் ரோஷனின் “வார் 2” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் ஒரு எல்.சி.யு. (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) இருப்பது போல, இந்தி சினிமாவில் ஒய்.எஸ்.யு (YSU) என்ற யுனிவர்ஸ் உள்ளது. அதுதான் பிரபல தயாரிப்பாளரான யாஷ்ராஜின் ஸ்பை யுனிவர்ஸ். இதில் இதுவரை ஏக் தா டைகர், டைகர் ஸிந்தா ஹை, வார், பதான் மற்றும் டைகர் 3 ஆகிய படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இதில் டைகர் 3 படம் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் படிக்க
Bigg Boss 7 Tamil: 'ஆள் வளர்ந்து இருக்குற.. ஆனால் அறிவு வளரலயே’ - விஷ்ணுவை வார்த்தையால் அர்ச்சனை செய்த அர்ச்சனா..
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அர்ச்சனா மற்றும் விஷ்ணு விஜய் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் படிக்க