RK Suresh: இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சு
இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பாமக கட்சியின் முக்கிய வேராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு “காடுவெட்டி” என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது என பட விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். பல படங்களில் வில்லனாக நடித்த இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர். இதனிடையே ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக காவல்துறை அவரை தேடி வந்த நிலையில் துபாயில் சென்று தலைமறைவானார். இதனைத்தொடர்ந்து ஆர்.கே.சுரேஷூக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனை ரத்து செய்தால் விசாரணைக்கு ஆஜராக தயார் என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவிக்க அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் சென்னை திரும்பிய அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார். இதனிடையே தான் நடித்த பட நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.கே.சுரேஷ் பேசியது வைரலாகி வருகிறது.
காடுவெட்டி படம்
இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பாமக கட்சியின் முக்கிய வேராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு “காடுவெட்டி” என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீசாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற்றது. இதில் காடுவெட்டி குரு கேரக்டரில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இதனிடையே இந்நிகழ்ச்சியில் ஆர்.கே.சுரேஷ் நொந்துபோய் கடந்த காலத்தில் தான் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பேசினார்.
View this post on Instagram
என்னை வச்சு பல கட்டுக்கதைகள் நிறைய வந்துச்சு. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே இருப்பேன். சில விஷயங்கள் என்னை புண்படுத்தியது. நான் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. அதுக்கு காரணம் என்னவென்று கேட்டால், நான் 15 வருசமா உங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். 100 படத்துக்கும் மேல் விநியோகம் செய்துள்ளேன். 40 படம் நடித்துள்ளேன். நிறைய படம் தயாரித்துள்ளேன். அந்த 15 வருட உழைப்பு என்பது பலருக்கும் தெரியும். நான் நிறைய தொழில்கள் செய்கிறேன். இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது. எல்லா சாதியினரிடத்திலும், அரசியல் கட்சிகளிடையேயும் அன்புடன் பழகி வருகிறேன். அப்படி ஒரு சூழலில் என்னை பற்றி தவறாக ஒரு விஷயம் வெளியே வந்துள்ளது.
என்னவென்று தெரியாமல் வெளியே அவ்வளவு கமெண்டுகள் பண்ணுகிறீர்கள். நான் சினிமாத்துறையில் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறேன். என் மேல் ஒரு செக் பவுன்ஸ் வழக்காவது வந்திருக்கா என்றால் எதுவுமே கிடையாது. யாருமே என்மேல் குற்றம் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் நான் எப்படி ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டு இருப்பேன் என நினைக்கிறீர்கள். என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் அனுபவமாக எடுத்துக் கொள்கிறேன். என் வழக்கில் நீதி வென்றது. என்னோட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் சினிமாவையும், அரசியலையும் விட்டு என்றைக்கும் செல்லமாட்டேன்" என ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.