மேலும் அறிய

சிவகுமாரின் வரிசையில் ரன்பீர் கபூர்: ரசிகரின் செல்ஃபோனை பிடுங்கி வீசிய சம்பவம்.. கொந்தளிக்கும் பாலிவுட் திரையுலகம்!

ஆங்ரி ரன்பீர் கபூர் எனும் ஹாஷ்டேகின் கீழ் சமூக வலைதளங்களில் ஒட்டுமொத்த பாலிவுட் சமூகமும் ரன்பீரின் இந்த செயலுக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

தன்னுடன் ஃபோட்டோ எடுக்க வந்த ரசிகரின் மொபைல் ஃபோனை வாங்கி நடிகர் ரன்பீர் கபூர் தூக்கியெறிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்

பாலிவுட்டின் ப்ராமிஸிங் நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் ரன்பீர் கபூர். தனது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை நாடு முழுவதும் கொண்டுள்ளார்.

80களின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீர் கபூர் நடிகர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குநராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின் அவரது இயக்கத்திலேயே தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கிய ரன்பீர் சாவரியா படம் மூலம் 2007ஆம் ஆண்டு அறிமுகமானார். 

இப்படம்  தோல்வியைத் தழுவினாலும் தொடர்ந்து சாக்லேட் நாயகனாக இளம் வயதினரை ஈர்த்து கவனமீர்க்கத் தொடங்கினார். ஆனால் 2011ஆம் ஆண்டு வெளியான ராக் ஸ்டார் படம் ரன்பீரின் நடிப்பு பயணத்தையே தலைகீழாகத் திருப்பி போட்டது. ராக் ஸ்டாரில் கோபக்கார கலைஞனாகவும் நடிப்பு அசுரனாகவும் உருவெடுத்து பாலிவுட் தாண்டி பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார்.

அலியா பட் உடன் திருமணம்

அதன் பின் பாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவராக உருவெடுத்த ரன்பீர் பர்ஃபி, யே ஜவானி ஹே திவானி என ஒரு பக்கம் திறமையான படங்களைக் கொடுத்து வளர்ந்து வந்தாலும், மறுபுறம் பாக்ஸ் ஆஃபிஸில் தொடர் தோல்விப் படங்களையும் அளித்து வந்தார்.

மற்றொருபுறம் தீபிகா படுகோன், கத்ரினா கைஃப் என காதல் வாழ்விலும் கசப்புகள் தொடர இறுதியாக ’பிரம்மாஸ்திரா’ படப்பிடிப்பின்போது அலியா பட்டுடன் காதலில் விழுந்த ரன்பீர், அவரை சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவரது நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் மறுபுறம் வசூல் சாதனை படைத்து சென்ற ஆண்டு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படங்களின் வரிசையில் இடம்பிடித்தது.

வைரல் வீடியோ!

இந்நிலையில் முன்னதாக நடிகர் ரன்பீர் கபூர் தன் ரசிகர் ஒருவரின் கைப்பேசியைப் பிடுங்கி தூக்கி எறியும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடன் ஃபோட்டோ எடுக்க வரும் ரசிகர் தொடர்ந்து ஃபோட்டோஸ் எடுக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் எரிச்சல் தாங்காமல் செல்ஃபோனை வாங்கி ரன்பீர் தூக்கி எறியும் வகையில் உள்ள இந்த வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வைரலாகியுள்ளது.

 

ஒரு புறம் இது மொபைல் ஃபோன் கம்பெனிக்கான விளம்பரமாக இருக்கலாம் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் பெரும் கண்டனங்களைப் பெற்று இந்த வீடியோ இணையத்தில் சலசலப்பைக் கிளப்பி வருகிறது. மேலும் ஆங்ரி ரன்பீர் கபூர் எனும் ஹாஷ்டேகில் ஒட்டுமொத்த பாலிவுட் சமூகமும் ரன்பீருக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

 

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான சிவக்குமார் இதே போல் சில ஆண்டுகளுக்கு முன் ரசிகர் ஒருவரின் கைப்பேசியை தட்டி விட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget