Rajinikanth : மீண்டும் அதே ஏழு பேர்..மீண்டும் அதே பதில்...மறுபடியும் சிக்கிய ரஜினிகாந்த்
திருவண்ணாமலை நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்தது பற்றி கேட்டபோது நடிகர் ரஜினிகாந்த் அந்த நிகழ்வைப் பற்றி அறியாதது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரஜினிகாந்த்
"ஏழு பேர் விடுதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?" என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது ரஜினியின் பதில் "எந்த ஏழு பேர்" என்பதாக இருந்தது. இந்த நிகழ்வு நடந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு கேள்விக்கு அதே பதிலைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
திருவண்ணாமலை நிலச்சரிவு
பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை , கடலூர் , விழுப்புரம் , திருவண்ணாமலை , நாகப்பட்டினம் , தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பிற்குள்ளானது. சென்னை , விழுப்புரம் முழுவதுமாக வெள்ள நீரால் சூழப்பட்டன. மறுபக்கம் டிசம்பர் 1 ஆம் தேதி திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழ்நாட்டையே உலுக்கியது. திருவண்ணாமலை வ.உ.சி நகர் தீபம் ஏற்றும் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மணலில் புதைந்தன. ராஜ்குமார் என்பவரும் அவரது குழந்தைகள் உட்பட 7 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்கள். 3 நாட்கள் போராட்டத்திற்குப் பின் 7 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது.
நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு தலா 5 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ளது. ஆதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார். நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிவாரன நீதி கொடுத்துள்ளார்.
#ராஜீவ்காந்தி வழக்கில் கைதானவர்கள் பற்றி கேட்டபோது ' யார் அந்த 7 பேர் ? ' எனக்கேட்டார்.
— P.GOPI B.E(Mech)🧑🔧 (@er_gopitweet) December 9, 2024
இப்போது # திருவண்ணாமலை 7 பேர் பற்றி கேட்டதற்கு 'எப்போது நடந்தது?'
என்கிறார். Oh my god #ரஜினிகாந்த்#Rajinikanth𓃵 #Tiruvannamalai #landslide #Tiruvannamalaiandslide https://t.co/0N7osQVmQK
ஓ மை காட் எப்போ ?
நடிகர் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் அவர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். கூலி படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினி சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திருவண்ணாமலை நிலச்சரிவில் ஏழுபேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பினார்கள். இப்படியான நிகழ்வு ஒன்றே நடந்து தெரியாத ரஜினி " ஓ மை காட்..எப்போ ? வெரி சார்" என்று பதிலளித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ரஜினியின் இந்த பதில் சமூக ஆர்வலகர்கள் பலரின் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.