மேலும் அறிய

Rajinikanth To Himalayas : 'ராஜ்யமா இல்லை இமயமா?’ .. 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலை.. ரஜினி ப்ளான் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இமயமலைக்கு செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இமயமலைக்கு செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஜெயிலர் படம் ரிலீஸ் 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்திற்கு சினிமாவை தாண்டி ஆன்மிகம் மேல் அளவுக்கடந்த நம்பிக்கை உள்ளது. இதுவே அவரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்க காரணமாக அமைகிறது. இவர்கள் காலம் வரும் போது ரஜினி சொன்ன ஆன்மிக பேச்சுகளை ஸ்டேட்டஸ்களாக அப்டேட் பண்ணுவார்கள். இப்படியான நிலையில், ரஜினி 4 வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. 

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் அப்டேட்டுகள் 

ஜெயிலர் படத்தில் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதன் அறிமுக நிகழ்வு கடந்தாண்டு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூலை 6 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக காவாலா வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இதனையடுத்து ஜூலை 17 ஆம் தேதி இரண்டாம் பாடலாக “ஹூக்கும்” வெளியானது. ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடலாக ‘ஜூஜூபி’  பாடல் நேற்று முன்தினம்  வெளியானது. இப்படி பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற, படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. 

மேலும் ரிலீசுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

ரஜினியின் இமயமலை பயணம்

இந்நிலையில் ரஜினிகாந்த் 4 ஆண்டுகளுக்குப் பின் இமயமலைக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக தன் படங்களின் ஷூட்டிங் முடிந்தவுடன் அவர் இமயமலை செல்வது வழக்கம். அந்த வகையில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு தர்பார் பட ஷூட்டிங் முடிந்தபின் அவர் இமயமலை சென்றார். அதன்பின் 2020, 2021 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் பயணம் மேற்கொள்ளவில்லை.

ஆனால் இம்முறை ஜெயிலர், லால் சலாம்  படங்களின் ஷூட்டிங் அடுத்தடுத்து முடிந்தது. இதில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் ஒரு வார காலம் மாலத்தீவுக்கு சென்றிருந்தார். 

இதற்கிடையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இமயமலை செல்லும் ரஜினிகாந்த் அங்கு ஒரு வாரம் இருப்பார் எனவும், அங்குள்ள புனித தலங்களுக்கு செல்வார் எனவும் கூறப்படுகிறது. எப்போது தன்னுடன் மகள்களில் ஒருவரை உடன் அழைத்து செல்லும் ரஜினி இம்முறை தனியாக செல்ல உள்ளதாக சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இமயமலை செல்வதற்கு முன் ஜெயிலர் படத்தை சிறப்பு காட்சியை ரஜினி பார்த்துவிட்டு கருத்துகளை தெரிவிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் இமயமலை பயணம் என்பது அவரது ரசிகர்களுக்கு முன்மாதிரியான ஒன்றாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க..

DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!

LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Embed widget