மேலும் அறிய

Inspector Rishi : இன்ஸ்பெக்டர் ரிஷி படக்குழுவை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...வேட்டையன் செட்டில் வெளியான வீடியோ

அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் இன்ஸ்பெக்டர் ரிஷி படக்குழுவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்

வேட்டையன்

சீனியர் நடிகராக இருந்து கொண்டு சமகாலத்தில் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் எந்த மாதிரியான படங்கள் வெளியாகின்றன என்பதை எல்லா நடிகர்களும் கவனித்து வருவதில்லை. அந்த வகையில்  ஒரு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது என்றால் அதை வெளிப்படையாக பாராட்டும் வழக்கத்தை தொடர்ந்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு வெளியான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா , சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் குழுவை அழைத்து அவர்களை நேரில் சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். 

தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் , துஷாரா விஜயன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி, ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சமீபத்தில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரின் படக்குழுவை சந்தித்து பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

இன்ஸ்பெக்டர் ரிஷி படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த்

அமேசான் பிரைமில் வெளியாகி சர்ச்சைக்குரிய விமர்சனங்களைப் பெற்று வரும் வெப் சீரிஸ் ‘ இன்ஸ்பெக்டர் ரிஷி’ . இந்த தொடரில்  நவீன் சந்திரா , சுனைனா , மாலினி ஜீவரத்னம் , கண்ணா ரவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த தொடரில் பின்னணி இசை ரசிகரகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளம் இசையமைப்பாளர் அஸ்வத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜே.எஸ்  நந்தினி இந்த தொடரை இயக்கியுள்ளார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி வெளியாகிய இந்த தொடர் ரசிகர்களிடம் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

இப்படியான நிலையில் இந்த தொடரின் இயக்குநர் ஜே.எஸ் நந்தினியை வேட்டையன் படத்தின் படக்குழுவில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

படக்குழுவை சந்தித்து பேசிய ரஜினி “ இன்ஸ்பெக்டர் ரிஷி நல்லா போகுதாமே “ என்று கேட்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஜே.எஸ் நந்தினி. 

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Embed widget