மேலும் அறிய

Raayan: ’ராயன்’ படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் - தனுஷ் வெளியிட்ட சமீபத்திய அப்டேட்!

Raayan: நடிகர் பிரகாஷ் ராஜ் ராயன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பான முக்கிய அறிவுப்பு ஒன்றை தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் செல்வராகவன் ஏற்கனவே இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜூம் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக  தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது. 

தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில்  நாகார்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

D50

தனுஷ் இயக்கி நடித்திருக்கும்  D50 படம் கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரின் முடிவடைந்தது.  தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடித்துள்ளார் தனுஷ். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.  முன்னதாக ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டவர்களை வைத்து தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் சிறப்பான வெற்றி பெற்றது. ஒரு படத்தை இயக்குவதற்கு தான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பதாக தனுஷ் தெரிவித்து சில டைரக்‌ஷனுக்கு கேப் விட்டார். தற்போது தனுஷ் அதிதீவிரமான உழைப்பை போட்டு இயக்கி முடித்திருக்கும் படம் தான் D50.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா எடிட்டிங் பணியை மேற்கொள்ளும் நிலையில் ராயன் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த படத்துக்குப் பின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.  ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் முழுக்க முழ்க்க டீன் ஏஜ் டிராமாவாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget