Prabhas MI 7 Rumor | டாம் குரூசின் எம்.ஐ 7ல் நடிக்கிறாரா பிரபாஸ்?
பல நாட்களாக பல புரளிகள் வெளியான நிலையில் அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் அந்த படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர்.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது உருவாகி வரும் பிரபல ஹாலிவுட் திரைப்படமான மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பல நாட்களாக பல புரளிகள் வெளியான நிலையில் அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் அந்த படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர். IMF என்று அழைக்கப்படும் Impossible Mission Force என்ற நிறுவனத்தின் தலைசிறந்த அதிகாரியாக பணியாற்றும் ஈதன் ஹண்ட் என்பவற்றின் வாழ்க்கையில் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்த Mission இம்பாசிபிள் திரைப்படம்.
While he‘s a very talented man, we’ve never met.
— Christopher McQuarrie (@chrismcquarrie) May 26, 2021
Welcome to the internet. https://t.co/mvVFP6N4zV
ஈதன் ஹண்ட் என்ற கதாபாத்திரத்தில் கடந்த 26 ஆண்டுகளாக இந்த MI படங்களின் 6 பாகங்களில் நடித்து வருகின்றார் ஹாலிவுட் உலகின் டாப் கதாநாயகன் டாம் குரூஸ். 1996ம் ஆண்டு முதல் MI திரைப்படம் பிரைன் என்பவருடைய இயக்கத்தில் வெளியானது. அப்போது அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது. அதனை தொடர்ந்து 2000வது ஆண்டில் ஜான் வூ என்பவர் இயக்கத்தில் MI 2 வெளியானது. அன்று முதல் மக்களிடையே அதிக அளவிலான வரவேற்புடன் இந்த MI பாகங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இந்த MI சீரிஸ் படங்களை கடந்த மூன்று பாகங்களாக இயக்கி வருகின்றார் கிறிஸ்டோபர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்தபடியாக MIயின் 8ம் பாகத்தையும் அவர் இயக்குவார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரபல நடிகர் பிரபாஸ் MI 7 பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டாம் குரூஸ்உடன் நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் 'பிரபாஸ் ஒரு திறமையான மனிதர் என்பதை நான் அறிவேன். ஆனால் இதுவரை நாங்கள் சந்தித்ததில்லை' என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிறிஸ்டோபர்.
பிரபல நடிகர் பிரபாஸ் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சூர்யநாராயண ராஜு என்பவரின் மகன் தான் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ள பிரபாஸ் 2015ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக சுஜித் இயக்கத்தில் வெளியான பிரமாண்டமான திரைப்படமான சாஃஹோ என்ற படத்தில் தோன்றிய பிரபாஸ் தற்போது மூன்று வித்யாசமான படங்களில் நடித்து வருகின்றார். ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் காதல் சார்ந்த திரைப்படமான ராதா ஷியாம். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அச்டின் த்ரில்லர் படமாக உருவாகி வரும் சலார் மற்றும் ஓம் என்பவர் இயக்கத்தில் இதிகாச காவியமான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார் பிரபாஸ். 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் அதிபுருஷ் திரைப்படம் இந்திய அளவில் அதிக செலவில் உருவாகும் படம் என்று கூறப்படுகிறது.