Prabhas : ஏன் கல்யாணம் ஆகலன்னு தெரியுமா? அதிர்ச்சியான பதில் கொடுத்த பாகுபலி பிரபாஸ்.. அதிர்ந்த ரசிகர்கள்..
தனது `ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் ப்ரொமோஷன்களுக்காக மும்பையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ், தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.
தனது `ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் ப்ரொமோஷன்களுக்காக மும்பையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ், தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். காதல் குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்ட போது, நடிகர் பிரபாஸ் உடனடியாக கூறிய பதில், அங்கிருந்த அனைவரையும் வெடித்து சிரிக்க வைத்துள்ளது.
கடந்த மார்ச் 2 அன்று மும்பையில், `ராதே ஷ்யாம்’ திரைப்படத்திற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் பிரபாஸ். `ராதே ஷ்யாம்’ படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றிருந்த வசனம் ஒன்று குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. நடிகர் பிரபாஸ் `ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்கும் கைரேகை நிபுணராக நடித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் நடிகர் பிரபாஸிடம், `படத்தில் ஒரு வசனம் வருகிறது.. காதலைக் குறித்த உங்கள் கணிப்பு அவ்வளவு துல்லியமானது இல்லை என அந்த வசனம் கூறுகிறது. நிஜ வாழ்க்கையில் காதலைப் பற்றிய உங்கள் கணிப்பு என்ன?’ எனக் கேட்கப்பட்டது.
View this post on Instagram
உடனடியாக பதிலளித்த நடிகர் பிரபாஸ், `காதலைப் பற்றிய எனது கணிப்புகள் எப்போது தவறாகவே இருந்துள்ளன; அதன் காரணமாகவே நான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். நடிகர் பிரபாஸ் இவ்வாறு கூறியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, நெட்டிசன்கள் பலரும் நடிகர் பிரபாஸின் புத்திசாலித்தனமான பதிலையும் பாராட்டி வருகின்றனர்.
`ராதே ஷ்யாம்’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், அதன் ப்ரொமோஷன்களுக்காக அதன் தயாரிப்பாளர்கள் ட்ரைலர் வெளியீட்டை மும்பையில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர்.
நடிகர் பிரபாஸ், விக்ரமாதித்யா என்ற கதாபாத்திரத்திலும், நடிகை பூஜா ஹெக்டே, ப்ரேரனா என்ற கதாபாத்திரத்திலும் ஜோடியாக நடித்துள்ளனர். வரும் மார்ச் 11 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள `ராதே ஷ்யாம்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சீன மொழி, ஜப்பானிய மொழி ஆகிய மொழிகளின் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.