"சிரஞ்சீவி அண்ணே, உயிர் இருக்குற வரைக்கும் மறக்கமாட்டேன்” - நடிகர் பொன்னம்பலம் உருக்கம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1980களில் தொடங்கி தற்போது வரை வில்லனாகவும். சண்டைப்பயிற்சி கலைஞருமாக இருந்து வருபவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் ரகுவரனுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோருடன் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் நடிகர் பொன்னம்பலம். நாட்டாமை, முத்து, பெரிய குடும்பம், அருணாச்சலம், சிம்மராசி, திருநெல்வேலி போன்ற பல்வேறு படங்களில் பொன்னம்பலம் வில்லனாக நடித்த கதாபாத்திரத்தினை யாராலும் தற்போதும் மறக்க முடியாது என்றே சொல்லலாம்.  அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறனை அவர் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் பல திரைப்படங்களில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும் சினிமாத் துறையில் வலம் வந்தவர் தான் பொன்னம்பலம்.
சினிமாவில் தனக்கு கொடுத்த வில்லன் கதாபாத்திரத்தினை வைத்து மிரட்டிய பொன்னம்பலத்திற்கு, கடந்த ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த அவர்,சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்ன செய்வது என்று திகைத்து கொண்டிருந்த வேளையில் தான், பொன்னம்பலத்தின் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளுக்கும் அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் கல்விக்கான செலவினை  நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டார். இது மட்டுமின்றி  நடிகர் ரஜினியும் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவதாக தெரிவித்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலே பொன்னம்பலத்தின் உடல் நிலை மோசமான நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. 
இச்சிகிச்சைக்காக ஏற்கனவே தமிழ் திரையுலகத்தினர் உதவி செய்த வந்த நிலையில், அந்த வரிசையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான  சிரஞ்சீவியும் பொன்னம்பலத்தின்  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனையடுத்து, சிரஞ்சீவிக்கு காணொலி வாயிலாக நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த காணொலியில் சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம் என்றும், ஜெய் ஸ்ரீராம் என்று தனது பேச்சைத் தொடங்கியுள்ள அவர், “ரொம்ப நன்றி அண்ணே! என்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம், மிகவும் உதவியாக இருந்தது” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன் என்றும் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார். இதோடு உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணே" என்று பொன்னம்பலம் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கொரோனா தொற்றின் பாதிப்பு சினிமாத்துறை கலைஞர்களின் வாழ்க்கையினை பாதித்துள்ளது. இதனையடுத்து கொரொனா  நெருக்கடி அறக்கட்டளை என்கிற அமைப்பை ஆரம்பித்து, பெருந்தொற்றின் காரணமாக  வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் திரைப்படக்கலைஞர்கள் பலருக்கும் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து உதவி செய்து வருவது  குறிப்பிடத்தக்கது.

Tags: thanks help actor chiranjeevi tamil actor ponnambalam operation

தொடர்புடைய செய்திகள்

Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?

Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy  | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு