மேலும் அறிய

Dhanush: காசியில் கலக்கிய தனுஷ்.. கைதட்டி பாராட்டிய 7 ஆயிரம் பேர்.. எல்லாம் அந்த படம்தான்!

ராஞ்சனா படத்தில் சோனம் கபூருக்கு பள்ளி காலத்தில் தனுஷ் ப்ரோபோஸ் பண்ற மாதிரி ஒரு காட்சி இருக்கும். காசியில் உள்ள பனாரஸில்தான் அந்த காட்சியை நாங்கள் எடுத்தோம்.

ராஞ்சனா பட ஷூட்டிங்கில் தனுஷ் ஆடிய டான்ஸை பார்த்து 7 ஆயிரம் பேர் கைதட்டி பாராட்டினார்கள் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான நடராஜன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியின் ராஞ்சனா என்ற படம் வெளியானது. ஆனந்த் எல். ராய் இயக்கிய இப்படத்தில் தனுஷ், சோனம் கபூர், அபேய் தியோல், விபின் சர்மா, அரவிந்த் கவுர், குமுத் மிஸ்ரா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நடராஜன் சுப்பிரமணியம் பணியாற்றிருந்தார். 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ராஞ்சனா படத்தின் ஷூட்டிங்கில் மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி பேசினார். அதில், “ராஞ்சனா படத்தில் சோனம் கபூருக்கு பள்ளி காலத்தில் தனுஷ் ப்ரோபோஸ் பண்ற மாதிரி ஒரு காட்சி இருக்கும். காசியில் உள்ள பனாரஸில் தான் அந்த காட்சியை நாங்கள் எடுத்தோம்.

எப்போதும் சினிமாவில் பனாரஸின் ஒரு பக்கம் மட்டுமே காட்டுவார்கள். அந்த பக்கம் வழிபாட்டுத்தலங்கள் இருப்பதால் பெரிதாக காட்ட மாட்டார்கள். அங்கிருக்கும் கடவுள்களை மட்டும் காட்சிப்படுத்துவார்கள்.

நாங்கள் அங்கே போய் ஷூட் பண்ணினோம். நாங்க ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த இடத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இந்தி படம் என்பதால் நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். 

அந்த காட்சியில் டீ கடையில் ஒரு இந்தி பாட்டு ஓடும். அதன் வழியாக தனுஷ் சோனம் கபூருக்கு தன் காதலை சொல்ல வேண்டும் என்றபடி காட்சி இருந்தது. அந்த டான்ஸை அவர் ரிகர்சல் பார்க்கவில்லை. நான் எங்கே சென்றாலும் கேமராவை கொண்டு வருவீர்களா என தனுஷ் என்னிடம் கேட்க, சரி ஓகே என நான் சொன்னேன். அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி முடிந்ததும் சுற்றியிருந்த அந்த மக்கள் 7 ஆயிரம் பேரும் கைதட்டி பாராட்டினார்கள்” என தெரிவித்துள்ளார். 

இப்படியாக தனுஷ் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நடராஜன் சுப்பிரமணியம்தான், அவர் நடித்த கர்ணன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நீட் தேர்வில் குளறுபடி; உச்ச நீதிமன்றம் என்டிஏவுக்கு நோட்டீஸ்! கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு
நீட் தேர்வில் குளறுபடி; உச்ச நீதிமன்றம் என்டிஏவுக்கு நோட்டீஸ்! கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு
RSS On Manipur:  ”அரசியல் பேச்சு போதும், பற்றி எரியும் மணிப்பூரை கவனியுங்கள்”  - RSS தலைவர் மோகன் பகவத்
RSS On Manipur: ”அரசியல் பேச்சு போதும், பற்றி எரியும் மணிப்பூரை கவனியுங்கள்” - RSS தலைவர் மோகன் பகவத்
Breaking News LIVE: நீட் ரத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது - நடிகர் சத்யராஜ்
Breaking News LIVE: நீட் ரத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது - நடிகர் சத்யராஜ்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy airport new terminal |திருச்சியில் புதிய முனையம்! விமானத்துக்கு வாட்டர் சல்யூட்Chandrababu and Nitish kumar | சபாநாயகருக்கு டார்கெட்! சந்திரபாபு, நிதிஷின் ப்ளான்! பின்னணி என்ன?PM Modi Cabinet | முரண்டு பிடிக்கும் கூட்டணியினர்! தலைவலியில் பாஜக! அமைச்சரவை பூகம்பம்NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நீட் தேர்வில் குளறுபடி; உச்ச நீதிமன்றம் என்டிஏவுக்கு நோட்டீஸ்! கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு
நீட் தேர்வில் குளறுபடி; உச்ச நீதிமன்றம் என்டிஏவுக்கு நோட்டீஸ்! கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு
RSS On Manipur:  ”அரசியல் பேச்சு போதும், பற்றி எரியும் மணிப்பூரை கவனியுங்கள்”  - RSS தலைவர் மோகன் பகவத்
RSS On Manipur: ”அரசியல் பேச்சு போதும், பற்றி எரியும் மணிப்பூரை கவனியுங்கள்” - RSS தலைவர் மோகன் பகவத்
Breaking News LIVE: நீட் ரத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது - நடிகர் சத்யராஜ்
Breaking News LIVE: நீட் ரத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது - நடிகர் சத்யராஜ்
Educational Loan: மாணவர்களுக்கு கல்விக்கடன் உயர்வு; வெளியான சூப்பர் அறிவிப்பு- விவரம்
Educational Loan: மாணவர்களுக்கு கல்விக்கடன் உயர்வு; வெளியான சூப்பர் அறிவிப்பு- விவரம்
Electricity Bill: ஜூலை 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வா? தமிழ்நாடு அரசு சொன்னது என்ன..?
ஜூலை 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வா? தமிழ்நாடு அரசு சொன்னது என்ன..?
Pondicherry Poisonous Gas : கழிவறையில் விஷவாயு தாக்குதல் - புதுச்சேரியில் 3 பெண்கள் உயிரிழப்பு, பொதுமக்கள் வெளியேற்றம்
Pondicherry Poisonous Gas : கழிவறையில் விஷவாயு தாக்குதல் - புதுச்சேரியில் 3 பெண்கள் உயிரிழப்பு, பொதுமக்கள் வெளியேற்றம்
Post Office Savings Scheme: போஸ்ட் ஆஃபிஸில் ஒரே ஒருமுறை முதலீடு - வட்டியாகவே ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம் - அது எப்படி?
போஸ்ட் ஆஃபிஸில் ஒரே ஒருமுறை முதலீடு - வட்டியாகவே ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம் - அது எப்படி?
Embed widget