![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
"சூப்பர் ஸ்டார்கிட்ட இருந்து இந்த விஷயத்தை கற்றுக்கொண்டேன் “ - நடிகர் முனிஷ்காந்த்!
”அவர் பந்து போட்டாரு. நான் அடிக்கல..அப்போ ரஜினி சார் சொன்னாரு......”
![actor munishkanth shared about working experience with munishkanth](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/d6bf981da9bfe647fa14ce5973b15ea6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமா பல பரிணாமங்களை கண்டிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடிகர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் சிலர் மட்டுமே தங்களுக்கான தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகின்றனர். அப்படி தனக்கான இடத்திற்காக போராடி வரும் நடிகர்தான் முனிஷ்காந்த். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கான மாறுபட்ட நடிப்பால் கலக்கி விடுகிறார் முனிஷ்காந்த். ராமதாஸ் என்னும் இயற்பெயர் கொண்ட முனிஷ்காந்த், முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் கிடைத்த புகழாலேயே முனிஷ்காந்த் என அழைக்கப்படுகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர், ஆரம்ப காலக்கட்டத்தில் சிறு சிறு வேடங்களில் அட்மாஸ்ஃபியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்துள்ளார். பல வருடங்களாக சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அவ்வபோது கூலி வேலை, கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் வேலை போன்ற பல பணிகளை செய்து வருமானம் ஈட்டி அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்துள்ளார். இவர் இறுதியாக விமலுடன் விலங்கு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தான் நடித்த அனுபவம் குறித்து ஷேர் செய்திருக்கிறார்.
View this post on Instagram
அதில் ”பேட்ட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல நான் ரஜினி சார் கூட கிரிக்கெட் விளையாடினேன். மாண்டேஜ் ஷார்ட் அது. காமெடி கலந்த காட்சியாக இருக்கும் அது. அவர் பந்து போட்டாரு. நான் அடிக்கல..அப்போ ரஜினி சார் சொன்னாரு அட இது கூட நீ ஒழுங்கா அடிக்கலையானு. பேட்ட படத்தின் முதல் காட்சியிலேயே ரஜ்னி சார் கூட நானும் நடிக்குற மாதிரி. அந்த சீன் 5 டேக் போனது. அது எல்லாமே என்னாலதான். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் வந்து என்னாச்சுண்ணே அப்படி கேட்டாரு. இல்லைங்க தலைவர பார்த்த உடனே பதட்டமா இருக்குனு சொன்னேன். அப்படித்தான் இருக்கும்னு சொன்னாரு. அதன் பிறகு ரஜினி சார் தட்டிக்கொடுத்தார் அந்த சீன் பண்ணேன். படம் முழுக்க இப்படித்தான் டேக் வாங்கிட்டு இருந்தேன். ரஜினி சாருக்கு ரொம்ப சகிப்புத்தன்மை அதிகம். அவர் கிட்ட சகிப்பு தன்மை உட்பட நிறைய கத்துக்கிட்டேன்” என்கிறார் முனிஷ்காந்த்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)