லோகேஷ் கனகராஜ் மீது கடும்கோபத்தில் கார்த்தி ? கைதி 2 குறித்த கேள்விக்கு எரிச்சலாக பதில்
கைதி 2 திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி கொடுத்த பதில் படம் கைவிடப்பட்டதா என்கிற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது

கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்குவார் என்று ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து பிரம்மாண்ட படஜெட்டில் படமியக்க கிளம்பிவிட்டார் லோகேஷ். அண்மையில் கைதி 2 படம் குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி சொன்ன பதில் ரசிகர்களிடம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது .
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். சூர்யா மற்றும் ஆமிர் கான் நடிக்க இருந்த இரும்பு கை மாயாவி படத்தின் கதையே இந்த படம் என கூறப்படுகிறது. தமிழில் உச்ச நட்சத்திரங்களை இயக்கிய லோகேஷ் அடுத்தபடியாக பான் இந்தியா படத்தை இயக்க நகர்ந்துள்ளார். ஆனால் எல்.சி.யு ரசிகர்கள் கைதி 2 படத்திற்காக காத்திருந்து வருகிறார்கள்
கைவிடப்பட்டதா கைதி ?
லோகேஷ் சினிமேட்டி யுனிவர்ஸின் தொடக்கப்புள்ளியாக அமைந்த படம் கைதி 2. இப்படத்தைத் தொடர்ந்தே லியோ , விக்ரம் ஆகிய படங்கள் உருவாகின. கூலி படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் கைதி 2 படத்தை மிக பிரம்மாண்டமாக லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கூலி படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் இந்த படம் குறித்து அவர் பேசுவதை அவர் தவிர்த்து வருகிறார்.
சம்பளம் தான் காரணமா?
கமல் , விஜய் , ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து வசூல் ரீதியான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் லோகேஷ். கூலி படத்தை இயக்க அவருக்கு ரூ 50 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. கைதி 2 படத்திற்கு லோகேஷ் ரூ 75 கோடி சம்பளமாக கேட்டதாகவும் இதனை தயாரிப்பு நிறுவனம் தர மறுத்ததால் கைதி 2 படம் நிலுவையில் உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அல்லு அர்ஜூன் படத்தை இயக்க லோகேஷ் 75 கோடி சம்பளமாக பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரத்தி பதில்
அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தியிடம் கைதி 2 பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் " அதை லோகேஷ் தான் சொல்லனும் ' என பதிலளித்தார். இதனால் கைதி 2 படம் தடைபட்டிருப்பதற்கு லோகேஷ் தரப்பில் தான் ஏதோ பிரச்சனை இருப்பதாகவும் கார்த்தி அடுத்தடுத்த படத்தை நோக்கி நகர்ந்துவிட்டதாகவும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.





















