Actor karthi :” லவ் பண்ணவே இல்லைங்க....காரணம் என் அம்மாதான் “ - உண்மையை போட்டுடைத்த நடிகர் கார்த்தி!
இவருக்கு கிட்டத்தட்ட 6 வருடங்கள் மணமகள் தேடி அலைந்தார்களாம் . பெண் கிடைக்கவே இல்லையாம்.. தனக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை என்கிறார் கார்த்தி.
கார்த்தி :
கடந்த 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் என்ற படம் மூலமாக நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்தி. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா என நடிகர் கார்த்திக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், பையா, கைதி, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, காஷ்மோரா, சுல்தான், சிறுத்தை, கொம்பன் என கிட்டத்தட்ட 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கார்த்தி விருமன் படத்திலும், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார். அவை இரண்டும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளனர்.
View this post on Instagram
காதல் திருமணம் செய்யாததற்கு காரணம் :
கார்த்தியின் அண்ணன் சூர்யா , நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அந்த காதல் கைகூட நீண்ட நெடும் போராட்டத்தை இருவரும் சந்திக்க வேண்டியிருந்தது. அது குறித்து சிவக்குமாரே பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார். காதல் திருமணத்தை ஆரம்பத்தில் ஏற்காத குடும்பம்தான் கார்த்தியின் குடும்பம். கார்த்தியின் அம்மா அடிக்கடி “ இதோ பாருப்பா... யாரையும் காதலிச்சுடாதே ! நாங்க கல்யாணம்லாம் பண்ணி வைக்க மாட்டோம்.. “ என அடிக்கடி சொல்லுவாராம் . அதனாலேயே காதல் என்னும் சப்ஜெக்ட் தனது வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது என்கிறார் கார்த்தி. இவருக்கு கிட்டத்தட்ட 6 வருடங்கள் மணமகள் தேடி அலைந்தார்களாம் . பெண் கிடைக்கவே இல்லையாம்.. தனக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை என்கிறார் கார்த்தி. இறுதியில் கார்த்தியின் அம்மா “யாரையாவது காதலித்தால் சொல்லு ..திருமணம் பண்ணி வைக்கிறேன் என்றாராம்“ அதை இப்போது சொன்னால் என்ன செய்வது என கூறிவிட்டு , வீட்டில் பார்த்த பெண்ணைதான் திருமணம் செய்துகொண்டார். காதல் என்பது எனக்கு நிஜ வாழ்க்கையில் இல்லை ரீல் வாழ்க்கையில் மட்டும்தான் என்கிறார் கார்த்தி.
View this post on Instagram