மேலும் அறிய

Watch Video : ஆளே மாறிப்போன கார்த்தி! மீண்டும் தொடங்கியது "சர்தார்" - வைரல் வீடியோ உள்ளே..!

நடிகர் கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு சுல்தான் படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு, கார்த்தி சர்தார் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் கார்த்தி சிறைக்கு பின்னால் முதியவர் தோரணையில் இருந்த ஸ்டில் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

Watch Video : ஆளே மாறிப்போன கார்த்தி! மீண்டும் தொடங்கியது

நடிகர் கார்த்தியும் பொன்னியின் செல்வன், விருமன், கைதி 2 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருந்ததால், அந்த படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இதனால், சர்தார் படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரண்டு தோற்றத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கும் இந்த படத்தில் சிறையில் உள்ள முதியவராக ஒரு தோற்றத்திலும், காவல்துறை அதிகாரியாக மற்றொரு தோற்றத்திலும் நடிக்கிறார். இதுதொடர்பாக, படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பதிவும் இதை உறுதி செய்கிறது. காவல்துறை கெட்டப்பில் மிடுக்காக உள்ள கார்த்தியிடம் இயக்குனர் மித்ரன் காட்சியை விளக்குவது போல இந்த வீடியோ உள்ளது. மேலும், இந்த வீடியோவிற்கு மேலே படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது மிகவும் அற்புதமாக இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

திரைக்கதை ஆசிரியர் ஸ்ரீதர் பிள்ளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் கார்த்தி நடிக்கிறார்.  படத்தின் படப்பிடிப்ப இன்று மீண்டும் தொடங்கப்பட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.

Watch Video : ஆளே மாறிப்போன கார்த்தி! மீண்டும் தொடங்கியது

நடிகர் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படங்கள் அனைத்தும் இதுவரை மெகாஹிட் ஆகியுள்ளது. ரத்னவேல் பாண்டியனாக நடித்த சிறுத்தை, தீரனாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் கார்த்தியின் திரை வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப்படங்கள் ஆகும். இந்த வரிசையில் தற்போது சர்தார் படத்திலும் கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
ZIM vs AFG: ஒரே டெஸ்ட்டில் 4 சதங்கள், 2 இரட்டை சதங்கள்! போட்டி போட்டு ஆப்கன் - ஜிம்பாப்வே ரன்மழை!
ZIM vs AFG: ஒரே டெஸ்ட்டில் 4 சதங்கள், 2 இரட்டை சதங்கள்! போட்டி போட்டு ஆப்கன் - ஜிம்பாப்வே ரன்மழை!
Embed widget