Karthi as Vandhiyathevan: வந்தியத்தேவனும் வாழ்ந்த கார்த்தியும்... ட்ரெண்ட் ஆக என்ன காரணம்?
பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆன பிறகு ட்ரெண்டாகி வரும் கார்த்தி, கொடுத்த கதாப்பாத்திரத்தை நியாயமாக நடித்துள்ளாரா கார்த்தி?
பொன்னியின் செல்வன் இன்று வெளியான நிலையில், படம் பார்த்த மக்கள் அனைவரும் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா என இப்படத்தில் நட்சத்திரங்களின் பட்டியலிட ஆரம்பித்தால் ஹனுமன் வால் போல் நீண்டு கொண்டே போகும். என்ன செய்வது 2000 பக்கங்களை கொண்ட கதை அல்லவா...அதனால்தான் மணிரத்தினம் நட்சத்திர பட்டாளத்தையே இறக்கி இருக்கிறார்.
இதில் பல நடிகர்கள் நடித்து இருந்தாலும், கார்த்தி நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். ஏனென்றால், பொன்னியின் செல்வன் நாவலிலேயே, வந்தியத்தேவன் மூலமாகதான் கதையே ஆரம்பிக்கிறது. அவன் யாரை சந்திக்கிறான், அவன் போகும் இடங்களில் நடக்கும் சம்பவங்களுடன் கதையை கடத்தி கொண்டு சென்று இருக்கிறார் மணி ரத்தினம்.
அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை, கார்த்தி பூர்த்தி செய்யும் அளவிற்கு நடித்துள்ளார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. புத்திசாலித்தனத்துடனும் , பேரழகான தோற்றத்துடனும் சுட்டித்தனத்துடனும் மாவீரானாக வளம் வருகிறார் கார்த்தி. கல்கியின் சித்தரிக்கப்பட்ட கதையை அழகாக மெய்பித்து காட்டியிருக்கிறார் மணி ரத்தினம். கார்த்தியும் அதை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்.
View this post on Instagram
கார்த்தியின் ஒவ்வொரு அசைவிலும் க்யூட்னஸ் பொங்கி வழிந்தது, அதற்கு ஏற்றது போல் தியேட்டரிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஊரில் உள்ள அனைத்து பெண்களின் மேல் கண்வைத்து இருக்கும் வந்தியத்தேவன், குந்தவையின் மீது காதல் கொண்டு பின் மணம் முடிப்பான். ஆனால் இந்த படத்தில் இருவருக்குமான ரொமான்ஸ் சீன் குட்டியாக இருந்தாலும் தரமாக இருந்தது. அந்த காதல் காட்சிகளில் மணி ரத்தினத்தின் டச் இருந்தது
முதல் பாகத்தில், முக்கால் வாசியாக திரையில் இடம்பெற்று இருக்கிறார் கார்த்தி. இரண்டாம் பாகத்திலும் இப்படி அமையுமா என்பது ஒரு பெரிய கேள்வியாக அமையும்.
மேலும் படிக்க : Ponniyin Selvan 1 Review: பொன்னி நதி பார்க்கலாமா? பொன்னியின் செல்வன் போகலாமா? நச் நச் விமர்சனம்!
Ponniyin Selvan : பொன்னியின் செல்வன் கதையை ஆண்ட இரண்டு பெண் கதாபாத்திரங்கள்....!