மேலும் அறிய

kamal haasan: நடிகர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு பதவி..!

நடிகர் சங்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தில் புதிதாக  பதவி ஏற்றியிருக்கும் பாண்டவர் அணி முதல் வேலையாக நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இருப்பதாக கூறி  இதற்காக 21 கோடி ரூபாய் தேவைப்படும் என கூறி இருக்கின்றனர். இது மட்டுமன்றி தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் தமிழ்நாடு  நடிகர் சங்கம் எனவும் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்ககத்தில் ஒரு முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி கமல் நடிகர் சங்க அறங்காவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.  முன்னதாக, பூச்சி முருகன், சச்சு, நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சங்க தேர்தலில்  கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது. பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். 

பாண்டவர் அணி வெற்றி

இந்தத்தேர்தலில் பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர், கருணாஸ் மற்றும் பூச்சு முருகன் ஆகியோர் அடங்கிய பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

kamal haasan: நடிகர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு பதவி..!

முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கு உறுப்பினர்கள் முறையாக அழைக்கப்படவில்லை மற்றும் தேர்தலை அனைத்து இடங்களிலும் நடத்தாமல் சென்னையில் மட்டும் நடத்தியதாக கூறி இதை ரத்து செய்ய வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். இந்த வழக்கில் 2020ஆம் அவர் தீர்ப்பளித்தார். அதில், 2019ஆம் ஆண்டு நடைபெற்று தேர்தலை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்து,  மூன்று மாதத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இந்தத் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, “கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளன.

வாக்கு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளது. மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என நடிகர் சங்கம் தரப்பில் வாதிட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அவர்களுடைய தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த தேர்தலின் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், இடையில் பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக கூறி ஐசரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தப்பட்டது. அதனைத்தொடந்து வாக்கு எண்ணிக்கை பணி தொடர்ந்த நிலையில் இறுதியில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
Embed widget