Jayam Ravi : ”நான் இப்போ அதிகமா டார்ச்சர் பண்றது இவரைத்தான்..” : ஜெயம் ரவி ஜாலி டாக்..
நான் இப்போ அதிகமா டார்ச்சர் பண்றது கார்த்தியைத்தான் என்று நடிகர் ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நான் இப்போ அதிகமா டார்ச்சர் பண்றது கார்த்தியைத்தான் என்று நடிகர் ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நான் இப்போது அதிகமாக டார்ச்சர் பண்றது கார்த்தியைத்தான் என்று சொல்லியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இணைந்து அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கிறார். அருள்மொழி வர்மன்தான் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் பின்னாட்களில் ராஜா ராஜா சோழன்.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவருடைய பேட்டியிலிருந்து:
நான் எப்பவும் நடிகர்கள் சிபி, ஜீவா, ஜேமி, கார்த்தி ஆகியோருடன் ஃபோன் பேசுவேன். இதில் இப்ப சமீபமாக நான் அதிகம் டார்ச்சர் பண்ணுவது கார்த்தியைத் தான். பொன்னியின் செல்வன் பட சூட்டிங்கின் போது அவருடன் ரொம்பவே நெருக்கமாகிவிட்டேன். அவர் அந்தப் படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கிறார். நான், பொன்னியின் செல்வனாக நடிக்கிறேன். இருவரும் படப்பிடிப்பின்போது ஒன்றாகவே இருப்போம்.
அவருக்கு சூட் இல்லாவிட்டாலும் என் படப்பிடிப்பை பார்க்க வந்துவிடுவார். நானும் அப்படித்தான் அவருடைய காட்சிகள் எடுக்கும்போது போய்விடுவேன். எனக்கு ஹார்ஸ் ரைடிங் அவ்வளவோ வராது. கார்த்திதான் சொல்லித் தந்தார். அவர் ரொம்ப ஸ்வீட் பெர்சன். நான் தான் இப்போ அவரை நிறைய டார்ச்சர் பண்ணிகிட்டு இருக்கேன்.
ஜெயம் ஆரம்பித்து இன்று பொன்னியின் செல்வன் வரை நான் பயணித்துள்ளது மிகப் பெரிய கிஃப்ட். ஆரம்பத்தில் இதை நான் புரிந்து கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இதை நான் ரொம்ப டேக் இட் ஃபார் கிரான்டட் ஆக இருந்துவிட்டேன். அப்புறம் தான் வாழ்க்கை தரும் தோல்வியைப் பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அப்போதான் அப்பாவும் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரி என்று சொல்லிக் கொடுத்தார்.
அதற்குப் பின்னர் தான் ஒவ்வொரு படத்தின் மீதும் எனக்கு ஈடுபாடும் வந்தது. எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. அதுபோல் வெரைட்டியான படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் வந்தது.. அப்படித்தான் டிக் டிக் டிக் பண்ணேன். ரோமியோ ஜூலியட்ட்டும் பண்ணேன். நல்ல படங்கள் பண்ண வேண்டும். நேர்மையாக உழைக்க வேண்டும். இதுதான் எனது கொள்கை.
இவ்வாறு ஜெயம் ரவி கூறியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சதா கதாநாயகியாக நடித்திருப்பார். இதில் கல்லூரி மாணவனாக ஜெயம் ரவி தோன்றி இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இந்தப்படத்திற்கு இவருக்கு கிடைத்த வெற்றியின் காரணமாகவே தன்னுடைய பெயருக்கு முன்பு ஜெயம் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார். இதில் ஜெயம் ரவி-சதா இருவருக்கும் இடையே இருக்கும் காதல் காட்சி இன்றும் ரசிகர்களை ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இப்படி ஜெயம் ரவிக்கு அண்ணன் மோகன் ராஜா இந்தப் படத்தின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு சிறந்த வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.