மேலும் அறிய

Goundamani case: கவுண்டமணியின் 20 வருட போராட்டம் வெற்றி! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு - என்னாச்சு?

நடிகர் கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணிக வளாகம் கட்டுவதற்காக, நடிகர் கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு  உத்தரவிட்டுள்ளது.

கவுண்டமணி வழக்கு:

தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டாடப்படும் ஒரு காமெடி நடிகர் கவுண்டமணி. 80, 90 கால கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். செந்தில், கவுண்டமணி  காமெடிக்காகவே படத்தை பார்த்தவர்கள் என ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 

இந்த நிலையில், கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்
நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.

கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், 2003 ஆம் ஆண்டு வரை கட்டுமான பணிகள்  தொடங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார்.  சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், நடிகர் கவுண்டமணி இடம் இருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

2019 ஆம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து  ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்திருந்தது.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும்  தீர்ப்பளித்துள்ளது. வணிக வளாகம் கட்டுவதற்காக, நடிகர் கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு  உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க

Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை” - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸி படம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget