Bike Taxi: “பெண் ஓட்டுநரின் கதை” - எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸி படம்!
பைக் டாக்ஸி ஓட்டும் ஒரு பெண் அவள் சந்திக்கும் மனிதர்கள் என ஒரு நாளில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் நக்ஷா சரண் என்பவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
பைக் டாக்ஸி படம் சமூக அக்கறை கொண்ட படமாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் என அப்படத்தின் இயக்குநர் கணபதி பாலமுருகன் கூறியுள்ளார்.
நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
the *#Pooja Ceremony of the movie ‘#Biketaxi
— view7media (@view7media) March 14, 2024
*Directed by #.Ganapathy #Balamurugan (License Movie Director)*
*Produced by K.M.Ilanchezhian (New Normal Film Factory)*
Team Bike Taxi,
Team AIM pic.twitter.com/oBEoIf45E1
தொடர்ந்து செய்தியளர்களை சந்தித்த தயாரிப்பாளர் இளஞ்செழியன் பேசியதாவது, “இயக்குநர் கணபதி பாலமுருகன் இதுவரை இயக்கிய இரண்டு படங்களுமே அனைவருக்குமான படம். ஒரு காட்சி கூட முகம் சுளிக்க வைக்காது. இந்தப்படமும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இருக்கும். எங்கள் நிறுவனம் சார்பில், வெற்றிப்படங்களை விட நல்ல படைப்புகளை மட்டுமே தர வேண்டுமென நினைக்கிறோம். பைக் டாக்சி ஓட்டும் ஒரு பெண் அவள் சந்திக்கும் மனிதர்கள் என ஒரு நாளில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் நக்ஷா சரண் என்ற பெண்ணை ஹீரோயினாக அறிமுகம் செய்கிறோம்’ என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய இயக்குநர் கணபதி பாலமுருகன், “வித்யா எனும் பைக் டாக்சி ஓட்டும் பெண், ஒரு நாளில் சந்திக்கும் 6 மனிதர்களின் கதை தான் இப்படம், ஒரு நாள் 6 மனிதர்கள், 6 கதைகள் என மிகச் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு பெரிய வெற்றிப்படத்தினை உருவாக்கும் முனைப்போடு தான் அனைவரும் வந்துள்ளோம்” என தெரிவித்தார்.
அறிமுக நாயகி நக்ஷா சரண், “இயக்குநர் எழுதியிருக்கும் கேரக்டரை, என்னால் முடிந்த வரை சிறப்பாகச் செய்வேன் என நம்புகிறேன்” என தெரிவித்தார். இப்படத்திற்கு A.R.ரெஹானா இசையமைக்கிறார் M.R.M.ஜெய்சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள். மிகுந்த பொருட்செலவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி நடித்த எனக்கு வேறு வேறு எங்கும் கிளைகள் கிடையாது மற்றும் பின்னணிப் பாடகி ராஜலட்சுமி கதையின் நாயகியாக நடித்த லைசென்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கிய மிகப்பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Seeman - Viduthalai: விடுதலை படத்தில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் நான் தான்.. சீமான் பேச்சு!