fahadh faasil : பா ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் ஃபகத் ஃபாசில்
பா ரஞ்சித் இயக்கவிருக்கும் வேட்டுவம் திரைபடத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பா ரஞ்சித்
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாற்று கதைக்களத்தை பேசியவர் இயக்குநர் ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ் , கபாலி , காலா , சார்பட்டா , நட்சத்திரம் நகர்கிறது , சமீபத்தில் தங்கலான் படத்தை இயக்கினார். விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தனித்த முயற்சியாக கருதப்படுகிறது. அடுத்தபடியாக பா ரஞ்சித் வேட்டுவம் என்கிற படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். ஃபகத் ஃபாசில் இப்படத்தில் இணைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா ரஞ்சித் படத்தில் இணையும் ஃபகத் ஃபாசில்
இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஃபகத் ஃபாசில் இந்த ஆண்டு ஆவேஷம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார் ஃபகத் ஃபாசில் , தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் , விக்ரம் , மாமன்னன் , வேட்டையன் ஆகிய படங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகிய புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
#Vettuvam by #PaRanjith Exclusive - Talks going on with #FahadhFaasil to do an important role 🔥
— Itz_Prasanna (@prasanna_dbc) December 11, 2024
• PRE production work in progress l, shoot starts from next year
• Magical realism based gangster drama ✅
• Gethu #Dinesh in lead role , #Arya as antagonist pic.twitter.com/CKwqjuqk2r
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாரீசன் படத்தில் இணைந்து நடிக்கிறார் ஃபகத் ஃபாசில். தவிர இந்தியில் இம்தியாஸ் அலி இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து பா ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . தங்கலான் திரைப்படத்தைப் போலவே இப்படமும் மேஜிக்கல் ரியலிஸம் ஜானரில் கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது
மேலும் படிக்க : சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Nayanthara : பட்டம் வேண்டாம்னு கெஞ்சினேன்..லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி நயன்தாரா பேட்டி