Bhagyaraj 3.6.9 Movie: 81 நிமிடத்தில் முடிந்த ஷூட்டிங்... ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த பாக்யராஜ் படம்!
கே.பாக்யராஜ் நடிப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு வெறும் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பல்வேறு புதிய முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய சாதனை ஒன்றை தமிழ் திரையுலகின் அறிமுக இயக்குநர் படைத்துள்ளார். இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “3.6.9”. முழுநேர திரைப்படமான இந்த திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் படமாக்கி படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தின் கதை நாயகனாக பிரபல இயக்குனரும். நடிகருமான பாக்யராஜ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் உள்ள கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள பிள்ளையார்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது.
குறைந்த நேரத்தில் ஒட்டுமொத்த படத்தையும் படமாக்க வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டிருந்ததால் படக்குழுவினர் ஆயத்தமாக படப்பிடிப்பிற்கு வந்தனர். சரியாக கடந்த புதன்கிழமை காலை 11.40 மணிக்கு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சரியாக 1.01 மணிக்கு வரை மட்டுமே தொடங்கியது. தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 81 நிமிடங்களில் நிறைவு பெற்றது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு படம்பிடிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் பிளாக் பாண்டி, சுஹைல், அஜய்கண்ணன், சத்தி மகேந்திரா உள்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் தயாரிப்பாளரான பி.ஜி.எஸ். இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.
81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இந்த படத்திற்கு மாரீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா என்பவர் இசையமைத்துள்ளார். ஆ.கே.ஸ்ரீநாத் எடிட்டிங் செய்கிறார். கலை இயக்குனராக ஸ்ரீமன் பாலாஜி பணிபுரிந்துள்ளார்.
ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் படம்பிடிக்கப்பட்டது. இந்த படத்தின் உருவாக்கத்திற்காக சுமார் 450 தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து, இந்த படத்தின் உருவாக்கத்தை நேரில் பார்வையிட்டு, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் என்ற அமைப்பிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. முழுக்க, முழுக்க விஞ்ஞானம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஹாலிவுட் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் சிவ மாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 மணி நேர முழு நேர திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் படமாக்கி சாதனை படைத்துள்ள இயக்குனர் சிவ மாதவ், தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். உள்ளிட்ட படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Pak Break India Record : இந்தியாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் - ரிஸ்வான்!
மேலும் படிக்க : Today Headlines : அதிகரிக்கும் ஒமிக்ரான்.. வருண்சிங்கிற்கு அஞ்சலி... மீண்டும் ஸ்மித்... இன்னும் பல செய்திகள்!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்