மேலும் அறிய

Arjun Story : நடிகர் அர்ஜூனின் கதை.. ஆக்‌ஷனில் மாஸ் காட்டும் துருவா சார்ஜா... 6 கோடி பேர் பார்த்த மார்ட்டின் பட டீசர்!

ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' எனக் கொண்டாடப்படும் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ’மார்ட்டின்’.

கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா.  இவர் நடிப்பில் உருவாகியுள்ள மார்ட்டின் படத்தின் டீசர் இரண்டே நாள்களில் 60 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.

வாசவி எண்டர்ப்ரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' எனக் கொண்டாடப்படும் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ’மார்ட்டின்’.  பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம் உருவாகியுள்ளது.

கேஜிஎஃப், காந்தாரா படங்களைத் தொடர்ந்து கன்னட சினிமா இந்திய அளவில் கவனம் பெற்று வரும் நிலையில்,  அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள மார்ட்டின் படம் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் மணி சர்மா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கேஜிஎஃப் புகழ் ரவி பர்சூர் இந்தப் படத்துக்கு பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். கே எம் பிரகாஷ் எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் - பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூரு, ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், இயக்குநர் AP அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டம், துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரம் உள்ளிட்டவை கவனம் ஈர்த்து இந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் துருவா என்பது குறிப்பிடத்தக்கது.

 

யூடியூபில் முன்னதாக வெளியான டீசர், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் வெளியான இந்த டீசர் 2 நாள்களில் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. பான் இந்தியா படமான மார்ட்டின் வரும் மார்ச் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget