Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
CMCHIS Health Insurance: தமிழக அரசு சார்பாக தனியார் மருத்துவமனையில் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி.? என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
மருத்துவ மனையில் நாள் தோறும் பல ஆயிரம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பணம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் பல லட்சத்தை கொடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவு செய்து மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்ற காரணத்தால் தவித்து வந்தனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக கடந்த 2006 -2011 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சையை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.
25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு
இந்த திட்டம் படிப்படியாக உயர்ந்து 5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் உயர் ரக சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும். இருந்த போதும் இருதய பிரச்சனை, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு மூலம் பயன் அடைய முடியாத நிலையானது இருந்து வந்தது. இந்த நிலையில் மருத்துவ காப்பீட்டு தொகையை தமிழக முதலமைச்சர் விஜய் 25 லட்சமாக உயர்த்தி உள்ளார். எனவே இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம். யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும்.? ஆவணங்கள் என்ன தேவை என்பதை பார்க்கலாம்.
காப்பீட்டு திட்ட பயன்கள்
அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு காப்பீட்டு வசதி உள்ளது.
தேவையான ஆவணங்கள்
குடும்ப அட்டை
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்
வருமானச் சான்றிதழ்
தேவையான பிற அடையாள அல்லது முகவரி ஆவணங்கள்
மருத்துவ காப்பீடு யார் விண்ணப்பிக்கலாம்?
பொதுப் பிரிவில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தகவல்படி வருமான உச்சவரம்பு இல்லாமல் சிறப்பு தகுதி வழியாக சேர்க்கும் ஏற்பாடும் உள்ளது.
மருத்துவ காப்பீட்டை பெற எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டையைப் பெற, உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள CMCHIS அட்டை வழங்கும் அல்லது சேர்க்கை மையத்தை அணுகலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தகுதி உறுதி செய்யப்பட்டு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
எந்த எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.?
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்ற பிறகு, CMCHIS திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இணைக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Before You Go
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















