மேலும் அறிய

பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?

MRTS TO CHENNAI METRO : 15 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, சென்னை பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக சென்னை பீச்சில் இருந்து சேப்பாக்கம், வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை இயக்கப்பட்டு வந்த பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறவுள்ளது.

சென்னையில் ரயில் திட்டங்கள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மின்சார ரயில், பறக்கும் ரயில் திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது. அதிலும் 5 ரூபாய் 10 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் எளிய மக்களுக்கு உதவியாக உள்ளது. அந்த வகையில் சென்னை கடற்கரை முதல் - வேளச்சேரி வரை சுமார் 19 கி.மீட்டர் பறக்கும் ரயில் திட்டமானது செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தினந்தோறும் பல ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்பட்டது.

பறக்கும் ரயில் டூ மெட்ரோ ரயில்

இந்த வழித்தடத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், சென்னை பறக்கும் ரயில் சேவையை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசால் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட முன்மொழிவுக்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) கையெழுத்தாகியுள்ளது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கு ரயில்வே வாரியம்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த மே மாதம் தெற்கு ரயில்வேக்கும் தமிழக அரசுக்கும் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, சொத்துகளை ஒப்படைத்தல் மற்றும் MRTS புறநகர் ரயில் சேவைகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. 

2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் இயக்கம்

இதன் படி, தெற்கு ரயில்வே தனது சொத்துகள் மற்றும் பொதுவான பராமரிப்புகளை 90 நாட்களுக்குள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் முதன்மை ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு தவிர்த்து மற்றவை மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் முழுமையான ரயில் செயல்பாடுகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் வழங்கப்படும் எனவும், இந்த காலக்கட்டத்தில், தமிழக அரசு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை முழுமையாகவோ அல்லது தவணைகளிலோ செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் நிலையங்கள் மேம்பாடு

இந்த வழித்தடத்தில் மொத்தமுள்ள  21 ரயில் நிலையங்களில் 19 நிலையங்களின் நிலம், உள்கட்டமைப்பு, மின்தூக்கிகள்  நகரும் படிகட்டுகள்  நடைமேம்பாலங்கள், தண்டவாளங்கள், சிக்னல் அமைப்புகள் மற்றும் மின்சார ரயில்கள் அனைத்தும் மெட்ரோ நிர்வாகத்திடம் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பறக்கும் ரயில் திட்ட பாலத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ரயில்களும் மொத்தமாக மாற்றப்படவுள்ளது. 

புதிய திட்டங்கள் என்ன.?

சென்னை கடற்கரை மற்றும் சென்னை கோட்டை  நிலையங்களில் இணைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன.

கடற்கரை ரயில் நிலையத்தில் 9 மற்றும் 10 ஆகிய இரு நடைமேடைகள் MRTS சேவைக்காக ஒதுக்கப்படும்.

கோட்டை ரயில் நிலையத்தில் 'கிராசிங் ஸ்டேஷன்' அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில் எல்லாம் ஓகே!
தொழில் தொடங்குவோருக்கு ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி புதிய சட்டம்... இனி 21 நாளில் எல்லாம் ஓகே!
4 ஆண்டா உயர்த்தல... இப்ப வெறும் ரூ.3 தானா? - ஆவின் பால் கொள்முதல் விலையால் அன்புமணி கொந்தளிப்பு!
4 ஆண்டா உயர்த்தல... இப்ப வெறும் ரூ.3 தானா? - ஆவின் பால் கொள்முதல் விலையால் அன்புமணி கொந்தளிப்பு!
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget