தனுஷ் படத்தில் நடிக்க மம்மூட்டி கேட்ட சம்பளம்..விலகிய தயாரிப்பாளர்..உதவிக்கு வந்த கமல்
D55 : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தனுஷ் இந்தியில் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இன்னொரு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பக்கம் தனுஷ் தமிழில் நடிக்க இருக்கும் D55 படத்தின் தயாரிப்பாளர் விலகிடவே தற்போது இப்படத்தை கமல் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
D55
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இந்தியில் நடித்துள்ள தேரே இஷ்க் மே திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தமிழில் தனுஷ் போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 54 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக ஜி அன்புச்செழியன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில்
சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் மலையாள நடிகர் மம்மூட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தில் நடிக்க அவர் 24 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனால் படத்தின் பட்ஜெட் ரூ 160 கோடியை தொட்டுள்ளது. இதனால் கோபுரம் ஃபிலிம்ஸ் படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் தனுஷே தனது தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஸ்டுடியோஸ் மூலமாக படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
உதவிக்கு வந்த கமல்
வேலையில்லா பட்டதாரி , காலா ஆகிய படங்களை தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தாலும் 160 கோடி பட்ஜெட் படத்தை தயாரிப்பது இதுவே முதல் முறை. இப்படியான நிலையில்தான் ராஜ்குமார் பெரியசாமியின் முந்தைய படமான அமரன் படத்தை தயாரித்த கமல் இந்த படத்தையும் தானே தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தை எடுப்பதில் எந்த வித சமரசமும் இல்லாமல் எடுக்க துணை ராஜ்கமல் துணை நிற்பதாக படக்குழுவுக்கு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது .






















