Dhanush 52 : தனுஷ் இயக்கி நடிக்கும் 52 ஆவது படத்தின் டைட்டில் 'இட்லி கடை'
D52 Title : நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் தனுஷ் 52 ஆவது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது
தனுஷ்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் அடுத்தடுத்து இரு படங்களை இயக்கி வருகிறார். பவர் பாண்டி , ராயன் , நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் தனது நான்காவது படத்தை இயக்கி அதில் நடித்தும் வருகிறார். தயாரிபபாளர் சங்கம் தனுஷ் படங்கள் மீது விதித்த கட்டுப்பாடுகளை நீக்கீயதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியது. டாவ்ன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. தனுஷ் , நித்யா மேனன் , அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஜி வி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் டைட்டிலை தனுஷ் அறிவித்துள்ளார். கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இட்லி கடை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
#D52 #DD4 Om Namashivaaya 🙏♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr
— Dhanush (@dhanushkraja) September 19, 2024
நடிகர் டூ இயக்குநர்
ராயன் படத்தின் வெற்றி தனுஷை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தேர்ந்த இயக்குநராகவும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. தற்போது குபேரா படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்தடுத்து இந்தி , தமிழ் இயக்குநர்களின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் பலர் எதிர்பார்த்து வரும் படம் என்று இளையராஜா பையோபிக்கை சொல்லலாம். நடிகராக பிஸியாக இருந்தாலும் தன்னை கவர்ந்த கதைகளை தானே இயக்கியும் வருகிறார் தனுஷ். ஒரே மாதிரியான ரூட்டில் செல்லாமல் வெவ்வேறு கதைக்களங்களை தேடிச் சென்றுகொண்டு இருக்கிறார் தனுஷ். தனுஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அவர் இயக்கும் இட்லி கடை படம் கிராமத்து பின்னணியாக கொண்ட ஒரு எளிமையான கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்
மேலும் படிக்க : Sivakarthikeyan : இந்த படத்தை மக்கள் கைவிடமாட்டார்கள்...லப்பர் பந்து படக்குழுவினரை சந்தித்து பாராட்டிய எஸ்.கே