மேலும் அறிய

Friday Movie Release : வேட்டையனுக்கு பதுங்கிய குட்டி ஸ்டார்ஸ்.. நாளை செப் 20 வெளியாகும் திரைப்படங்கள்

Friday Movie Release (20-09-2024): ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள லப்பர் பந்து முதல் சசிகுமார் நடித்துள்ள நந்தன் வரை நாளை செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்

செப்டம்பர் 20 ரிலீஸ்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. ரஜினியின் படம் என்பதால் அதே நாளில் வெளியாக இருந்த கங்குவா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. போட்டியே இல்லாமல் சோலோவாக களமிறங்க இருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினி படத்துடன் போட்டியை தவிர்த்து முன்னதாகவே சில படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் நாளை செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படங்களைப் பார்க்கலாம்

லப்பர் பந்து

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் லப்பர் பந்து. இவர் அருண்ராஜா காமராஜா இயக்கிய நெஞ்சுக்கு நீதி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளார்களாம். வதந்தி வெப் சீரிஸ் மூலம் கவனமீர்த்த சஞ்சனா மற்றும் ஸ்வாசிகா விஜய் , பால சரவணன் , காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை அமையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஏற்கனவே விமர்சகர்களிடம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நாளை வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்து வருகிறது. 

நந்தன்

உடன்பிறப்பே படத்தை இயக்கிய இரா.  சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம்  'நந்தன்' . உண்மையை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில்  சசிகுமார் நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அதை வெளியிட திட்டமிடப்பட்டது. வரும் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சசிகுமார் நடித்த அயோத்தி , கருடன் படங்களைப் போலவே இப்படமும் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்று தரும் என்று எதிர்பார்க்கலாம்.

கடைசி உலகப்போர்

இசையமைப்பாளர் , இயக்குநர்  , நடிகர் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தற்போது அவர் தயாரித்து இயக்கி இசையமைத்து நடித்துள்ள படம் கடைசி உலகப்போர். நாசர் , நடராஜ் சுப்ரமணியம் , முனிஷ்காந்த் , ஹரிஷ் உத்தமன் , சிங்கம் புலி , இளங்கோ குமரவேல் . தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அரசியல் , ஆக்‌ஷன் கலந்து உருவாகி இருக்கும் இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. 

கோழிபண்ணை செல்லத்துரை

சீனு ராம்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோழிபண்ணை செல்லதுரை . ஏகன் , பிரிகிடா சாகா , சத்யா தேவி , யோகி பாபு , ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.என்.ஆர் ரகுநந்தன இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
Embed widget