"கம்பி கட்டுன கதை..." பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தை விமர்சித்த நடிகர் நட்டி ?
நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தை மறைமுகமாக விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டியூட் படத்தை விமர்சித்தாரா நட்டி சுப்ரமணி ?
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணி நடித்த ரைட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியானது. இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு வெளியான பைசன் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய படங்களுடன் அவர் நடித்த கம்பி கட்டுன கதை படமும் வெளியாகியது. தீபாவளிக்கு வெளியான படங்களில் பைசன் மற்றும் டியூட் திரைப்படம் மக்களிடையே பெரியளவில் வரவேறபைப் பெற்றுள்ளன. குறிப்பாக டியூட் திரைப்படம் 6 நாட்களில் 100 கோடி வசூலித்து தீபாவளி ரேஸில் முன்னிலையில் இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் நடிகர் நட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். இந்த பதிவில் அவர் "என்னதான் நல்ல படம் குடுத்தாலும் பாக்க யோசிப்பீங்க இல்ல..கம்பி கட்ன கதைய பாத்து ரசிச்ச அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த பதிவில் "உங்களுக்கு தான் காதல் அடுத்த காதல் தான புடிக்கும்.. வாழ்க காதல்" என அவர் கூறியுள்ளார்.
என்னதான் நல்ல படம் குடுத்தாலும் பாக்க யோசிப்பீங்க இல்ல..கம்பி கட்ன கதைய பாத்து ரசிச்ச அனைவருக்கும் நன்றி..🙏🏼🙏🏼🙏
— N.Nataraja Subramani (@natty_nataraj) October 23, 2025
பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தை விமர்சித்தே அவர் இப்படி கூறியுள்ளதாக ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகிறார்கள்.
கோலிவுட்டில் புதிய சாதனை படைத்த பிரதீப் ரங்கநாதன்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி டியூட் திரைப்படம் வெளியானது. மமிதா பைஜூ , சரத்குமார் உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கலகலப்பான ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள டியூட் படம் தமிழ் மட்டும் தெலுங்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. லவ் டுடே , டிராகன் தற்போது டியூட் என பிரதீப் ரங்கநாதன் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூல் ஈட்டியுள்ளன. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் 3 படங்களில் தொடர்ச்சியாக 100 கோடி வசூலித்த ஒரே நடிகராக பிரதீப் ரங்கநாதன் சாதனை படைத்துள்ளார்





















