மேலும் அறிய

”என்னையா திட்டுன, எப்படி ஊருக்கு போறன்னு பாக்குறேன்னு மிரட்டுனாரு” : சீக்ரெட்ஸ் சொன்ன பெஞ்சமின்

தமிழில் திருப்பாச்சி, வசூல் ராஜா MBBS , வெற்றிக்கொடி கட்டு போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின்.

தமிழில் திருப்பாச்சி, வசூல் ராஜா MBBS , வெற்றிக்கொடி கட்டு போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். இவரைப் பற்றி யோசித்தாலே வடிவேலுவை அவர் திட்டும் சீன் தான் நினைவுக்கு வரும். பெஞ்சமின் என்ற நடிகர் இருப்பதே அந்த சீக்வன்ஸ் மூலமாகத்தான் தெரிந்தது.

மேடை டூ சினிமா:
பெஞ்சமின் மேடை நாடகக் கலைஞராக இருந்தவர். அவருக்கு சினிமாவில் வாய்ப்புக் கொடுத்தது இயக்குநர் சேரன் தான். இயக்குநர் சேரனின் வெற்றிக்கொடி கட்டு படத்தில் பெஞ்சமின் வடிவேலுவுக்கு மச்சானாக வருவார். வடிவேலு துபாய் ரிட்டர்ன் பந்தாவில் பெஞ்சமின் பெருமை பீத்த அவரை கெட்ட வார்த்தையால் விளாசி தள்ளுவார் பெஞ்சமின். அந்தக் காட்சி படமாக்கப்பட்டது குறித்து பெஞ்சமின் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர், நான் முதல் நாள் வடிவேலு சாருடன் நடிக்கக் காத்திருந்தேன். சூட்டிங்குக்கு வந்த வடிவேலு சார். புதுப்பையனா ஒழுங்காக நடிப்பியா என்று கேட்டார். நான் அதற்கு, பாலச்சந்தர் சார் சிஷயன். அதெல்லாம் நல்லா நடிப்பேன். எந்த பயமும் இல்லை என்று சொன்னேன். அவ்வளவு தான் வடிவேலு சார் என்னை ரவுண்டு கட்டிட்டார். அந்தப் படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க சேரன் சார் திட்டமிட்டிருந்தார். 400 அடி ரீல் ரூ.15000க்கு விற்ற காலம் அது.

முதல் டேக் எல்லா வசனமும் பேசிவிட்டு வடிவேலு சாரை திட்ட வேண்டிய வசனம் வந்தது. அப்போது நான் ஸ்டிரக் ஆகிவிட்டேன். சேரன் சார் என்னப்பா 340 அடி போயிருச்சு என்று கத்திவிட்டு ஒன்மோர் டேக் சொன்னார். அப்போதும் முடியவில்லை. இப்படியே 4 டேக் போயிருச்சு. சேரன் சார் ரொம்பவே டென்ஷன் ஆயிட்டார். அப்புறம்தான் நான் அவரிடம் பிரச்சனையை சொன்னேன்.

”என்னையா திட்டுன, எப்படி ஊருக்கு போறன்னு பாக்குறேன்னு மிரட்டுனாரு” : சீக்ரெட்ஸ் சொன்ன பெஞ்சமின்

சார் நீங்க பேசச் சொல்றீங்க. கேமராவை வடிவேலு சாருக்கு பின்னாடி வச்சிருக்கீங்க. நான் எப்படி பேசுறது. அவர் என் முன்னால் நின்று கொண்டு முகத்தில் ஆயிரம் பாவனை காட்டுகிறார். பேசு பார்ப்போம் என்பது போல் செய்கிறார் என்றேன். அடுத்த டேக் போகும்போது பார்த்திபன் சார் தலையிட்டார். வடிவேலு பேசி முடித்தவுடன் அவருடைய டிரைவரை அழைத்து காரை கொண்டுவரச் சொல்லி அவரை ஏற்றி அனுப்பினார். அப்புறம், வடிவேலு சாரை திட்டச் சொன்னார். இங்க பாரு அவரால ரூ.60,000 செலவாயிடுச்சு. அதை நினைச்சுகிட்டு திட்டு என்றார். அப்போது சின்ன தயக்கம் வந்தது. அவரே கெட்ட வார்த்தைகளில் திட்டிக் காட்டினார். அப்புறம் நான் பேசினேன். போதும்போதும் என்றளவுக்கு பேசி நடித்தேன். எல்லோருமே பாராட்டினார்கள். 

மிரட்டிய வடிவேலு:

அதன் பின்னர் வடிவேலு என்னிடம் வந்து என்னை என்னையா திட்டுற , எப்படி நீ ஊருக்கு போகிறேன் என்று நான் பார்க்கிறேன் என்று ஆவேசமாகச் சொன்னார். இயக்குநர் சேரனும் பார்த்திபனும் வடிவேலுவை சமாதானம் செய்தார்கள். அந்த காட்சியை நீக்கி விடுங்கள் என்று வடிவேலு பிடிவாதமாகச் சொன்னார். ஆனால் சேரனோ, இல்லை ஏற்கனவே படத்தின் நீளத்தின் காரணமாக பல காட்சிகளை நீக்கி விட்டேன். அதனால் இந்த காட்சி இருக்கட்டும் என்று எவ்வளவோ சமாதானம் செய்து அந்த காட்சியை படத்தில் வைத்தார்.

அப்படி உருவான காட்சிதான் இன்று என்னை அடையாளப்படுத்தியுள்ளது.

இவ்வாறு நடிகர் பெஞ்சமின் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஐசரி கணேஷ்
தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஐசரி கணேஷ்
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Sunaina Breakup : காதலனை பிரிந்த நடிகை சுனைனா..நிச்சயமான திருமணம் ரத்தா !
Sunaina Breakup : காதலனை பிரிந்த நடிகை சுனைனா..நிச்சயமான திருமணம் ரத்தா !
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi visit to Tamil Nadu: நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
நெருங்கும் தேர்தல்..! தமிழகத்தில் இன்று கால் பதிக்கும் மோடி.. யாரை சந்திக்கிறார்.? எங்கெல்லாம் செல்கிறார்.?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
Vijay Sangeetha: சங்கீதா போட்ட குண்டு..! குற்றச்சாட்டுகளால் ஆடிப்போயிருக்கும் தவெக விஜய் - அரசியல் சதியா?
PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?
PAK Vs SL: பங்காளிக்கு வந்த சோதனை..! இலங்கை வேலையை காட்டுமா? பாகிஸ்தானுக்கு அரையிறுதி டிக்கெட்?
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!

Embed widget