மேலும் அறிய

Vijay Govt Formation: தவெகவுக்கு கிரீன் சிக்னல்? சிபிஎம் எடுத்த முக்கிய முடிவு... வெளியான தகவல்

Tamil Nadu Government Formation: தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவளிக்க சிபிஎம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

காலையில் இருந்து நடந்த  சிபிஎம் செயற்குழு  கூட்டத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும் நிலவி வந்த அரசியல் இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் புதிய அரசு அமைவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தனது ஆதரவை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநரின் நிபந்தனை:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட 10 இடங்கள் குறைவாக இருந்தன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி (5 இடங்கள்) தவெக-வுக்கு ஆதரவு அளித்த நிலையில், பலம் 113 ஆக உயர்ந்தது. ஆயினும், "உரிய பெரும்பான்மையை (118 இடங்கள்) எழுத்துப்பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைக்க முடியும்" என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இதனால் கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.

சிபிஎம் எடுத்த அதிரடி முடிவு

தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் 5 இடங்களே தேவைப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக-விடம் ஆதரவு கோரியிருந்தார். இன்று காலை முதல் சென்னையில் நடைபெற்ற சிபிஎம் செயற்குழு கூட்டத்தில் இது குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை வழங்கவும், மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்தவும் தவெக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிபிஎம் ஆதரவு தந்துள்ள நிலையில், சிபிஐ மற்றும் விசிக ஆகிய கட்சிகளும் இதே போன்ற முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், விஜய் மிக எளிதாக 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க முடியும்.

அடுத்த கட்டம் என்ன?

சிபிஎம் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், விஜய் அவர்கள் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வந்த திமுக - அதிமுக என்ற இருமுனைப் போட்டி முடிவுக்கு வந்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்கும் காலம் கனிந்துள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget