மேலும் அறிய

Thirumavalavan: துணை முதலமைச்சர் ஆகும் திருமாவளவன்? விஜய் ஆட்சியமைக்க விசிக கிரீன் சிக்னல்?

Thirumavalavan Deputy CM: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைப் பிடித்துள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியைப் பிடிப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாமல் தவெக தவித்து வருகிறது.

காங்கிரஸ் 5 எம்எல்ஏ-க்களுடன் ஆதரவு அளித்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏ-க்களின் ஆதரவிற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைக் கோரியிருந்தனர். கம்யூனிஸ்ட் ஆதரவை அளித்துள்ள நிலையில், இந்த சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவிற்காக தமிழக வெற்றிக் கழகம் காத்திருக்கிறது. 

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியா?

விசிக ஆதரவு அளிக்க வேண்டுமென்றால் திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவியை விசிக நிபந்தனையாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று கருதப்படுகிறது. 

திருச்சி கிழக்கில் திருமா:

விடுதலைச் சிறுத்தையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையை தவெக நடத்தி வரும் சூழலில், விஜய் தான் ராஜினாமா செய்ய உள்ள 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் திருமாவளவனை வேட்பாளராக களமிறக்கவும் விசிக தரப்பில் நிபந்தனை விதிக்கப்படுகிறது. திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் பட்சத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக சட்டமன்ற உறுப்பினராக விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியிலே போட்டியிட உள்ளார்.

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி பெற்ற விஜய் தற்போது திருச்சி கிழக்கு தொகுதியிலே ராஜினாமா செய்வார் என்று கருதப்படுகிறது. இதனால், திருச்சி கிழக்கிலே அவர் வேட்பாளராக களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க போராடும் தவெக:

மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகியும் கடந்த 4 நாட்களாகவே தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஒவ்வொரு கட்சியினருடனும் ஆதரவு கோரி அலைந்து வந்தனர். விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சியினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கோரியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தங்களது கூட்டணி எப்போதும் திமுக-வுடனே என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். அதேசமயம், கம்யூனிஸ்ட், மாரக்சிஸ்ட் மற்றும் விசிக ஆகியோருடன் தவெக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.  இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் தங்களது ஆதரவை அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பதற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. திருமாவளவனின் முடிவிற்காகவே தமிழக வெற்றிக் கழகம் காத்துள்ளது.

கடந்த தேர்தலில் இந்த கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பிடித்து தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் தலா 5 தொகுதிகளில் போட்டியிட்டனர். 
விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். விஜய்க்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் திமுக கூட்டணியில் இருந்து இவர்கள் வெளியேறுகின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Embed widget