மேலும் அறிய

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம்  “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! 

துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகையுள்ளது

துல்கர் சல்மான்  நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம்,  தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.

தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath )  , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான்  தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக,  இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.

மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“  திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத்,  இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக  “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்-இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய்  அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.

தொழில்நுட்ப குழு விவரங்கள்:

லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங்: சமன் சாக்கோ
தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்
தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்
உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்
பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX   : தௌஃபீக்  (எக்வொயிட்)   (Eggwhite)
போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா
சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே
மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Advertisement

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget