மேலும் அறிய

பாஜகவுக்கு துணை போகலாமா...முஸ்லிம் லீக் கட்சிக்கு அமீர் கண்டனம்

இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் தவெக விஜய்க்கு இதுவரை தங்களது ஆதரவு தெரிவிக்காதது குறித்து இயக்குநர் அமீர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவை நாடியும் அக்கட்சி இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து திரைப்பட இயக்குநர் தனது வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார். விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காமல் முஸ்லிம் லீக் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக நிற்கிறதா என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இப்படியான நிலையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற சூழல் உள்ளது. இதனிடையே அதிக தொகுதிகளில் வென்றதால் தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதினார். தொடர்ந்து தனக்கு சட்டமன்றத்தில் ஆதரவு கொடுக்க பிற கட்சிகளின் உதவியை நாடினார். இதில் 5 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. 

இந்திய கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆதரவு 

ஆட்சியமைக்க மேலும் 6 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்கிற நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான விசிக , முஸ்லிம் லீக் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை நாடினார் விஜய். தற்போது இந்திய கம்யுனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது மக்களிடையே பெரிய ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியைப் பொறுத்தவரை மு க ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்வோம் என அக்கட்சியின் தேசிய கே எம் காதர் மொகிதீன் தெரிவித்திருந்தார். முஸ்லிம் லீக் கட்சியின் இந்த செயலை கண்டித்து திரைப்பட இயக்குநர் அமீர் பதிவிட்டுள்ளார்

அமீர் கண்டனம் 

தவெக மற்றும் விஜயை தொடர்ச்சியாக நேரடியாக விமர்சித்து வந்தவர் இயக்குநர் அமீர். ஆனால் தேர்தலில் தவெக வெற்றிபெற்றது குறித்து அவர் 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். தற்போது முஸ்லிம் லீக் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேடசில் " தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் வருவதை பாஜக தடுக்கலாம். அதற்கு முஸ்லிம் லீக் துணை போகலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார் .

தவெகவுக்கு கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget