‛மகாபிரபு... நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா...’ ட்விட்டரில் களமிறங்கிய பயில்வான் ரங்கநாதன்!
இன்றைய தலைமுறைக்கு யூட்யூப் சேனல்களின் மூலம் சினிமா பிரபலங்கள் குறித்த கிசுகிசுக்களும், அவர்களின் அந்தரங்க விவரங்களையும் பேசி வருவதால் நன்கு பிரபலம்.
நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தான் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
80, 90 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். அவர் இன்றைய தலைமுறைக்கு யூட்யூப் சேனல்களின் மூலம் சினிமா பிரபலங்கள் குறித்த கிசுகிசுக்களும், அவர்களின் அந்தரங்க விவரங்களையும் பேசி வருவதால் நன்கு பிரபலம். சென்னை வந்து பத்திரிக்கையாளர் பணியை பயில்வான் ரங்கநாதன் 1973 ஆம் ஆண்டு தொடங்கினார். இவரது உடற்கட்டை பார்த்து எம்ஜிஆர் இவருக்கு பயில்வான் என்ற பட்டத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
https://t.co/i7VgKYdJwp
— Payilvan Pechu (@payilvanrangan) August 20, 2022
திரிஷா? நயன்தாராவா?
சினிமா பத்திரிக்கையாளராக இருந்த பயில்வான் ரங்கநாதன் திரைப் பிரபலங்களோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக 1983 ஆம் ஆண்டு பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தனது பத்திரிக்கையாளர் பணியையும் தொடர்ந்து வந்தார். ஆனால் சினிமா பிரபலங்கள் குறித்து இவர் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த விவகாரத்தில் அனிருத் உட்பட 3 பேரையும் அவர் முகம் சுளிக்கும் வகையில் பேசியதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் பாடகி சுசித்ரா, இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் ஆகியோர் பயில்வான் நேரடியாக திட்டியது என சமீபகாலமாக பல சர்ச்சைகள் கிளம்பியது.
என்னை ட்விட்டரில் வரவேற்ற அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏#Jailer #AK61 #Varisu pic.twitter.com/69lO0ub2cb
— Payilvan Pechu (@payilvanrangan) August 22, 2022
ஆனால் சினிமா பிரபலங்கள் குறித்து இவர் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த விவகாரத்தில் அனிருத் உட்பட 3 பேரையும் அவர் முகம் சுளிக்கும் வகையில் பேசியதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் பாடகி சுசித்ரா, இரவின் நிழல் நடிகை ரேகா நாயர் ஆகியோர் பயில்வான் நேரடியாக திட்டியது என சமீபகாலமாக பல சர்ச்சைகள் கிளம்பியது.
விருமன் பட ஆடியோ விழாவில் சூரி பேசிய கருத்துக்கு அவரை சரமாரியாக விமர்சித்தார். சீதாராமம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் துல்கர் சல்மானிடம் வம்பிழுத்தது என பயில்வான் ரங்கநாதன் திரைத்துறையில் ஒருவரை கூட விட்டு வைத்ததில்லை. மேலும் தான் ஆதாரத்துடன் தான் அத்தனையும் பேசுவதாக கூட சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
நிலைமை இப்படியிருக்க தற்போது பயில்வான் ரங்கநாதன் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பயில்வான் பேச்சு என்ற பெயரில் அவர் ஆரம்பித்துள்ள கணக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில் விமர்சனங்கள், பரபரப்பான தகவல்கள், யூட்யூப் சேனல்களின் நான் பேசியது என அனைத்தும் இதில் பதிவிடப்படும் என பயில்வான் தெரிவித்துள்ளார். இதனால் இனிமேல் ட்விட்டர் தளமும் பயில்வானால் பரபரப்பு தளமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.