மெனக்கெட்டேன்.. எதிர்நீச்சல் போட்டேன்! சினிமாவின் தொடக்கக்காலம் குறித்து பேசிய அருண் விஜய்!
நடிகை விஜய்க்கு எஸ்ஏசி என்ற மிகப்பெரிய பிரம்மாண்டம் பின்னணியில் இருந்தார்.எனக்கு அப்பா இருந்தார். ஆனால் என்னை அப்பா ட்ரெய்ன் பண்ணார் என்று அருண் விஜய் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை விஜய்க்கு எஸ்ஏசி என்ற மிகப்பெரிய பிரம்மாண்டம் பின்னணியில் இருந்தார்.எனக்கு அப்பா இருந்தார். ஆனால் என்னை அப்பா ட்ரெய்ன் பண்ணார் என்று அருண் விஜய் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவருடைய பேட்டியில் இருந்து..
நடிகை விஜய்க்கு எஸ்ஏசி என்ற மிகப்பெரிய பிரம்மாண்டம் பின்னணியில் இருந்தார்.எனக்கு அப்பா இருந்தார். ஆனால் என்னை அப்பா ட்ரெய்ன் பண்ணார் நீ நீச்சல் கத்துக்கோ, நடனம் கத்துக்கோ, உடற்பயிற்சி பண்ணு, ஹார்ஸ் ரைடிங் கத்துக்கோ என்று என்னையே எல்லா மெனக்கிடல்களையும் செய்யச் சொன்னார். நான் எதிர்நீச்சல் போட்டுத்தான் வந்தேன்.
நான் கங்கா கெளரி, ப்ரியம் படங்கள் செய்தபோது அஜித் சார் அமர்க்களம் பண்ணார். விஜய் சார் கோயமுத்தூர் மாப்பிள்ளை, விஷ்ணு செய்து கொண்டிருந்தார். அப்போது எல்லாம் நடிகர்களுக்குள் பாண்டிங் இருந்தது. என் படத்தில் நடித்த துணை நடிகர் அஜித் சாரின் அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவர் அந்த துணை நடிகரிடம் விசாரிப்பாராம் அருண் விஜய் எப்படிச் செய்கிறார் என்று விசாரிப்பார் என்று அந்த நடிகர் வந்து சொல்வார். அதுபோல் என் ஹேர் ஸ்டைலும் விஜய் சார் ஹேர் ஸ்டைலும் ஒரே மாதிரி இருக்கும். என் படத்திலும் அவர் படத்திலும் ஒரே ஹீரோயின் நடித்துள்ளனர். விஜய் சார், அஜித் சார் எல்லாம் வயதிலும், அனுபவத்திலும் என்னைவிட சீனியர்கள் தான். நான் 17 வயதில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தேன். எனக்கு அந்த புரிதல் எல்லாம் இல்லை. சினிமா ரிலீஸுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.
நான் அப்போதான் என்ட்ரி ஆனேன். விஜய், அஜித் எல்லாம் ஏற்கெனவே எஸ்டாப்ளிஷ் ஆகியிருந்தனர். இருந்தாலும் ரிலீஸ் சிக்கல் எல்லாம் இருந்ததில்லை. நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும் இடையே நல்ல பாண்டிங் இருந்தது என்றார்.
நடிகர் விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய். அழகான தோற்றம், கட்டுக்கோப்பான உடல் வாகு, நடிப்பு என எல்லாமே பெஸ்ட்டாக இருந்தாலும் கூட ஆரம்ப நாட்களில் அவரது திரைப்பயணம் சற்று தடுமாற்றமாகவே இருந்தது. அவ்வப்போது ஹிட் அதன்பின் அமைதி என்றே சென்று கொண்டிருந்தது அவரது திரைப் பயணம். இந்நிலையில், அஜித்துடன் அவர் நடித்த என்னை அறிந்தால் படமும் அதில் விக்டர் கதாபாத்திரமும் அருண் விஜய்க்கு நல்லதொரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் நிதானமாக பல படங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் அருண் விஜய்.