5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Jaipur Crime: கடந்த 5 மாதங்களாக திட்டம் தீட்டி குடும்பத்தினர் 4 பேரை 17 வயது சிறுவன் கொன்று எரித்த சம்பவம் ஜெய்பூரில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jaipur Crime: கடந்த 5 மாதங்களாக திட்டம் தீட்டி குடும்பத்தினர் 4 பேரை கொன்ற வழக்கில், 17 வயது சிறுவன் சிக்கியது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
4 பேரை கொன்ற 17 வயது சிறுவன்
குடும்பப் பகை, வாரிசு தகராறு, மாத கணக்கில் திட்டம் மற்றும் குற்றச் செயல்கள் மீதான அதீத ஆர்வம் போன்ற காரணங்களால் ஒரு குடும்பமே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேட்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அஜ்மீர் பகுதியின் முன்னாள் தலைவர் ராம் சிங் சௌத்ரி, அவரது இரண்டாவது மனைவி, தாய் மற்றும் மருமகள் ஆகியோரின் கொலை வழக்கில் வெளிவந்துள்ள தகவல்கள் தான் மேற்குறிப்பிடப்பட்டவை ஆகும். எரிந்த நிலையில் காரில் இருந்து 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது ஆரம்பத்தில் ஒரு விபத்தாக கருதப்பட்டது. ஆனால், விசாரணையின் முடிவில் ராஜஸ்தானில் நடந்த மிகவும் கொடூரமான கொலையாக இது உருவெடுத்துள்ளது. ராம் சிங் சௌத்ரியின் 17 வயது மகனின் வித்தியாசமான செயல்பாடுகள் தான் மொத்த உண்மையும் அம்பலமாக முதல் காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் மீது எழுந்த சந்தேகம்
எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 4 பேரின் உடல்களும் இறுதி மரியாதைக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தன. உறவினர்கள் அனைவரும் வேதனையுடன் அழுதபடி தங்களது இழப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், அந்த 17 வயது சிறுவன் மட்டும் எந்தவித சலனமும் இன்றி மிகவும் அமைதியாக இருந்துள்ளான். அவனது தாயார் அழுதுகொண்டிருந்தபோது கூட மிகவும் அமைதியாக அருகிலேயே அமர்ந்து தேநீர் அருந்தியபடி சமாதானம் செய்துள்ளான். அவனது இந்த நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமானதாக இருக்க, காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இதனிடையே, ராம் சிங் தனது உடல்நலம் குன்றிய தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், புலனாய்வு விசாரணையில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அம்பலமான உண்மை:
எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பிணங்கள் அனைத்துமே பின் இருக்கையில் இருந்துள்ளன. எனில் வாகனத்தை ஓட்டியது யார்? என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு, தீ விபத்துக்கு முன்பே உடலில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் விபத்து என்பதில் இருந்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்ததில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலை செய்தது ஏன்?
ராம் சிங் சௌத்ரியின் இரண்டாவது திருமணம் காரணமாக குடும்பத்திற்குள் ஆழமான பிளவுகள் இருந்ததை புலனாய்வாளர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. தனது தாய் மோசமாக நடத்தப்படுவதாகவும், தனது உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், ராம் சிங் சௌத்ரியின் முதல் மனைவியின் மகன் கோபம் கொண்டுள்ளான். சொத்துகள் அனைத்தையும் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினரே அபரித்துக்கொள்வார்களோ என்ற அச்சமும் அவனுள் எழுந்துள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக தனது தந்தை உள்ளிட்டோரை கொலை செய்ய அந்த சிறுவன் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 பேரை கொலை செய்தது எப்படி?
சம்பவ நாளன்று ராம் சிங்கும் அவரது இரண்டாவது மனைவி சுர்ஜியானும் பீர் அருந்திவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் அந்த அறைக்குச் சென்ற சிறுவன்,கத்தியை கொண்டு தந்தையின் காது பகுதியில் குத்தி கொலை செய்துள்ளான். வலியால் அவர் அலறியதை கேட்டு எழுந்த சுர்ஜியனை வேறு வழியின்றி சிறுவன் கொலை செய்துள்ளான். இதனிடையே இருவரது அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து அறையிலிருந்து வந்த மேலும் இருவரையும் அந்த சிறுவன் கொலை செய்துள்ளாம். அதன் பிறகு வாகனத்தில் நான்கு பேரின் உடலையும் ஏற்றிச் சென்று, சாலையோரத்தில் தீ வைத்து கொளுத்தியுள்ளான் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் தனது தந்தையை கொல்வது மட்டுமே அந்த சிறுவனின் இலக்காக இருந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
சிறுவனின் நீண்டகால திட்டம்
குடும்பத்தினரையே கொலை செய்த சிறுவன குற்றச் சம்பவங்கள் தொடர்பான இணையத் தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் அதிகளவில் வந்ததாகவும், நீண்ட நேரம் இணைய விளையாட்டுகளை விளையாடி வந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் குற்ற நிகழ்விடங்கள், காவல்துறை நடைமுறைகள் மற்றும் குற்றவாளிகள் ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கும் வழிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Before You Go
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்























