Actor Aruldoss : ”இளையராஜவை பேச நீ யார்? நீ என்ன அப்பாடக்கரா?” மிஷ்கினை பொளந்த விடுதலை பட நடிகர்..
Mysskin : முதலில் இவர்கள் எல்லோரையும் இப்படி பேச முதலில் நீ யார்? நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்று நடிகர் அருள்தாஸ் கேள்வி எழுப்பினார்

சென்னையில் சமீபத்தில் நடந்த பாட்டில் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட இயக்குனர் மிஷ்கின் கொச்சையான வார்த்தைகளால் பேசியது பரபரப்பை கிளப்பியது. மிஷ்கின் பேசிய இந்த கருத்துக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் இணையதள வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Bottle Radha Review : கலங்க வைக்கும் க்ளைமேக்ஸ்...பாராட்டுக்களை அள்ளும் பாட்டில் ராதா படம்
மிஷ்சன் சர்ச்சை பேச்சு:
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களுள் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் பொது மேடைகளில் நாகரீகம் இல்லாமல் கொச்சையான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக இயக்குனர் பாலாவின் 25வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாலாவை அவன் இவன் என்று ஒருமையாக பேசியது, அதன் பிறகு பாட்டில் ராதா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவை கொச்சையான வார்த்தைகளில் பேசியிருந்தார். இந்நிலையில் மிஷ்கினின் பேச்சுக்கு நடிகரும் ஒளிபதிவாளருமான அருள்தாஸ் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Veera Dheera Sooran : விக்ரமின் வீர தீர சூர படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நீ என்ன அப்பாடக்கரா?
இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 2K லவ் ஸ்டோரி என்கிற திரைப்படத்தின் ட்ரையிலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் பேசியதாவது “முதலில் இவர்கள் எல்லோரையும் இப்படி பேச முதலில் நீ யார்? நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர் இயக்குனர் மிஷ்கின் தனது பேச்சால் தமிழ் சினிமாவிற்கு பெரிய அவமானத்தை ஏற்ப்படுத்தி வருகிறார். இவர் எல்லாம் ஒரு இயக்குனரே கிடையாது, கொச்சையாக அவர் மேடையில் பேச அதை மேடையில் உள்ளவர்கள் அதை பார்த்து கைத்தட்டி சிரிக்கின்றனர்.
பெரிய அப்பாடக்கரா நீ? மிஸ்கின் போலி அறிவாளி!#myskin #aruldoss #2KLoveStory pic.twitter.com/5k7w81KHqY
— ABP Nadu (@abpnadu) January 22, 2025
இளையராஜாவை அவன் இவன் என்று சொல்லுகிறார், வெற்றிமாறன், அமீரை தவிர அனைவரும் குடிக்கிறோம் என்று சொல்லுகிறார். மேலும் பல ஜாம்பவன்களை உருவாக்கிய தமிழ் சினிமாவில் மிஷ்கின்னின் இந்த கொச்சையான பேச்சால் அருவருப்பாக உள்ளது” என்றார்






















