Bottle Radha Review : கலங்க வைக்கும் க்ளைமேக்ஸ்...பாராட்டுக்களை அள்ளும் பாட்டில் ராதா படம்
குரு சோமசுந்தரம் , சஞ்சனா நடராஜன் , பாரி இளவழகன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பாட்டில் ராதா படத்தின் விமர்சனங்களைப் பார்க்கலாம்

பாட்டில் ராதா
பா ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள படம் பாட்டில் ராதா. குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ். கருணா பிரசாத், மாலதி அசோக் நவின், சுஹாசினி சஞ்சீவ், சிரஞ்சீவி, ஓவியர் சௌ. செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனீஷா, மாதவி ராஜ், கலா குமார் (ஜெய பெருமாள்), அன்பரசி, சேகர் நாராயணா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷால் ரோல்டன் இசையமைத்துள்ளார். குடிப்பழக்கத்தை மையமாக வைத்து காமெடி டிராவாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இன்று பாட்டில் ராதா படத்தின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தைப் பார்த்த விமர்சககர்கள் படம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்
பாட்டில் ராதா விமர்சனம்
"இன்றைய காலகட்டத்துக்கு தேவையான நல்ல கருத்தை கமர்சியலாக சொல்கிறது கதை. குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் கேரக்டர்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்..இசை அருமை. குடிப்பவர்கள், குடிக்க ஆசைப்படுபவர்கள், குடி நோயாளிகள், அனைத்து குடிமகன்கள் குடும்பத்துடன் பார்க்கலாம்" என ஒருவர் தெரிவித்துள்ளார்
#BottleRadha🍻 3.5/5
— meenakshisundaram (@meenakshinews) January 22, 2025
இன்றைய காலகட்டத்துக்கு தேவையான நல்ல கருத்தை கமர்சியலாக சொல்கிறது கதை. குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் கேரக்டர்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்..இசை அருமை. குடிப்பவர்கள், குடிக்க ஆசைப்படுபவர்கள், குடி நோயாளிகள், அனைத்து குடிமகன்கள் குடும்பத்துடன் பார்க்கலாம் pic.twitter.com/ecSuC9k6aj
"இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு கதையை பாட்டில் ராதா படம் பேசுகிறது. குடி பழக்கம் ஒரு மனிதனையும் அவனது குடும்பத்தையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை நகைச்சுவையும் உணர்ச்சிவசமாகவும் சொல்லியிருக்கிறார்கள். ' என மற்றொருவர் தெரிவித்துள்ளார்
#BottleRadha [3.5/5] : A much needed movie for today's society..
— Ramesh Bala (@rameshlaus) January 22, 2025
Shows how alcohol addiction ruins a man and his family's life..
Humor and Emotional.. @gurusoms has lived the title role as an alcohol addict.. @sanchana_n as the frustrated wife is excellent..
A subdued…#BottleRadha - 3.25 stars. Beautiful film that plays out like an awareness drama on the horrors of alcohol addiction. Adequately emotional and sporadically funny too. A bold film overall with powerful, moving lead performances by Guru Somasundaram and @sanchana_n. After a long,…
— Haricharan Pudipeddi (@pudiharicharan) January 22, 2025
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

