மகளை வைத்து நடிகர் அர்ஜூன் இயக்கியுள்ள ' சீதா பயணம்' டீசர் வெளியானது
நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து இயக்கியுள்ள சீதா பயணம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

நடிகர் அர்ஜூன் இயக்கியுள்ள புதிய படம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைத்துறையில் இருந்து வருபவர் நடிகர் அர்ஜூன். ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் , முதல்வன் என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த ஆண்டு அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆக்ஷன் மற்றும் நெகட்டிவ் ரோல்களில் கலக்கி வரும் மீண்டும் இயக்குநராக களமிரங்க இருக்கிறார்.
1992 ஆம் ஆண்டு சேவகன் படத்தின் மூலம் அர்ஜூன் இயக்குநராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 'ஜெய் ஹிந்த் ' , வேதம் , ஏழுமலை உள்ளிட்ட 12 படங்கள் இயக்கியுள்ளார். கடைசியாக தனது மகளை வைத்து சொல்லிவிடவா படத்தை இயக்கினார் . தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து அர்ஜூன் இயக்கியுள்ள 'சீதா பயணம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
சீதா பயணம் டீசர்
அர்ஜூன் இயக்கும் இந்த படத்தை தன்னுடைய ஶ்ரீராம் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா இந்த படத்தில் நாயகன் நாயகியாக் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் , சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். விஷாலின் மதகஜ ராஜா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. இதன் பின் ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரியளவில் அவருக்கு ஹிட் கிடைக்கவில்லை. தற்போது சீதா பயணம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். தமிழ் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் நேற்று மே 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
Happy to launch the Kannada teaser of #SeethaPayanam ❤️
— Upendra (@nimmaupendra) May 29, 2025
A heartwarming and intriguing glimpse into a beautiful journey ✨
Wishing @akarjunofficial sir and the entire team all the very best ❤️
Check out the #SeethaPayanamTeaser now!
▶️ https://t.co/SSMajKzjdJ… pic.twitter.com/PJ88Hhvew2





















