R.K.Suresh :ஒரே மாதிரி இருக்க கத்துக்கோங்க..! வாழ்க்கை எப்படினாலும் மாறலாம்..! ஆர்.கே. சுரேஷ் அட்வைஸ்
ஏற்றி விட்ட ஏணியை மறக்க கூடாது. நடிகை இந்துஜாவிற்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே. சுரேஷ்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டவர் ஆர். கே சுரேஷ். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லிகர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றி இருந்தார்.
இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன ?
பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ் சமீபத்தில் விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் எர்ணாவூர் நாராயணன் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் "காலங்களில் அவள் வசந்தம்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.கே. சுரேஷ், நடிகை இந்துஜா பேசிய ஒரு விஷயத்திற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
View this post on Instagram
இந்துஜாவின் அறிமுகம் :
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான "நானே வருவேன்" திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் நடிகை இந்துஜா. இவர் 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தனது சிறப்பான நடிப்பால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி நடிகர் ஆர்.கே. சுரேஷ் ஜோடியாக நடித்த திரைப்படம் தான் 2018ம் ஆண்டு வெளியான "பில்லா பாண்டி". இப்படத்தில் ஒப்பந்தம் செய்யும் போதே நடிகர் ஆர்.கே சுரேஷ் வரிசையாக அடுத்த நான்கு திரைப்படங்களில் இந்துஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துஜாவிற்கு சரியான பதிலடி கொடுத்த ஆர்.கே. சுரேஷ் :
சமீபத்தில் நடிகை இந்துஜா ஒரு பேட்டியின் போது நீங்கள் நடித்ததிலேயே மிகவும் மோசமான திரைப்படம் என்றால் எதைக் கூறுவீர்கள் என்று கேட்டதற்கு சற்று யோசித்த பிறகு நடிகை இந்துஜா, பில்லா பாண்டி என கூறியிருந்தார்.
இந்த விஷயத்தை அறிந்த ஆர்.கே. சுரேஷ் மிகவும் வேதனையுடன் " நடிகர், நடிகைகள் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்தாலும் ஏற்றி விட்ட ஏணியை என்றுமே மறக்க கூடாது. வாழ்க்கை ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் மாறலாம். உதாரணமாக, நடிகை சமந்தா ஒரு சாதாரண நடிகையாக திரைத்துறையில் நுழைந்து இன்று எட்ட முடியாத வளர்ச்சியை அடைந்துள்ளார். எந்த நிலையில் இருந்தாலும் நாம் ஒரே மாதிரி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என மேடையில் அறிவுரை வழங்கி நடிகை இந்துஜாவிற்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.